சீமாந்திராவின் புதிய "சிங்கப்பூரை" நிர்மானிக்க உண்டியல் ஏந்தி நிதி வசூல் செய்யும் நாயுடு அரசு!
ஹைதராபாத்: மலேசியாவில் ஒதுக்கப்பட்ட சிங்கப்பூர் எப்படி பின்னாளில் மிகப் பெரிய அருமையான நாடாக, நகரமாக உருவெடுத்ததோ அதேபோல தற்போது தெலுங்கானாவிடம் ஹைதராபாத்தைப் பறி கொடுத்துள்ள நிலையில் புதிய தலைநகரை உருவாக்க வேண்டிய நிலையில் இருக்கும் சீமாந்திரா அரசு, புதிய தலைநகரை சிங்கப்பூர் போல அதி நவீன வசதிகளுடன் கூடிய நகரமாக உருவெடுக்க தீவிர முயற்சிகளில் இறங்கியுள்ளது.
சிங்கப்பூரைப் போலவே அனைத்து வசதிகளையும் கொண்ட அற்புதமான நகராக புதிய தலைநகரை உருவாக்கத் திட்டமிட்டுள்ளது சந்திரபாபு நாயுடு தலைமையிலான ஆந்திர அரசு.
இதற்காக அது பல வழிகளிலும் முயற்சிகளைத் தொடங்கியுள்ளது. அதன் ஒரு கட்டமாக புதிய நகருக்குத் தேவையான நிதிய மக்களிடம் வசூலிப்பதற்காக உண்டியல் ஏந்தியும் அது நிதி வசூலில் ஈடுபட்டுள்ளது.

சிங்கப்பூரில் நேரில் ஆய்வு
சிங்கப்பூருக்கு நேரில் போய் அந்த நகரம் குறித்து நேரில் ஆய்வு செய்ய நாயுடு அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக 2 அமைச்சர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. விரைவில் இக்குழு சிங்கப்பூர் செல்லவுள்ளது.

நிதி வசூல்
மறுபக்கம் புதிய தலைநகருக்கு மக்களிடமிருந்து நிதி சேகரிக்க்த தொடங்கியுள்ளனர். பொதுமக்கள், தொழில் அதிபர்கள், வியாபாரிகள் தாராளமாக நிதி வழங்கும்படி சந்திரபாபு நாயுடு கேட்டுக்கொண்டுள்ளார். இதற்காக தனியாக வங்கி கணக்கு ஒன்றும் தொடங்கி உள்ளார்.

உண்டியல் மூலமும் வசூல்
ஹைதரபாத்தில் உள்ள சீமாந்திர மாநில தலைமைச் செயலகத்தில் எல்.பிளாக் பகுதியில் தலைநகருக்கு நிதி திரட்ட பெரிய உண்டியல் வைக்கப்பட்டுள்ளது.

உண்டியலில் பணம் போடலாம்
இந்த உண்டியலில் அனைவரும் தங்களது நிதியைச் சேர்க்கலாம் என்றும் அரசு அறிவித்துள்ளது. உயர் அதிகாரிகள், முக்கிய பிரமுகர்கள் இங்கு வருவதால் தாராளமாக நிதி கிடைக்கும் என அரசு கருதுகிறது. விரைவில் மேலும் 2 உண்டியல் வைக்கவும் அரசு திட்டமிட்டு உள்ளது.

10 வருடங்களுக்குப் பிறகு
முதல் பத்து வருடங்களுக்கு ஹைதராபாத், இரு மாநிலங்களுக்கும் பொதுவான தலைநகராக இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு சீமாந்திரா தனக்கென புதிய தலைநகரை தேர்வு செய்து கொள்ள வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications