சீமாந்தரா மின் ஊழியர்கள் போராட்டம் வாபஸ்! இருளில் இருந்து மீளும் ஆந்திரா
ஹைதராபாத்: முதல்வர் கிரண்குமார்ரெட்டியின் வேண்டுகோளை ஏற்று சீமந்தரா மின் ஊழியர்கள், இன்று தங்களது போராட்டத்தை வாபஸ் பெற்றுக்கொண்டனர்.
ஆந்திராவில், தெலுங்கானா எதிர்ப்பு போராட்டத்தின் ஒரு பகுதியாக சீமந்திராவின் மின் ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இதன் காரணமாக மின்உற்பத்தி மற்றும் மின்விநியோகம் பாதிக்கப்பட்டதால் சீமந்திராவின் 13 மாவட்டங்கள் இருளில் மூழ்கியது.

இதனால் மருத்துவமனைகள் மற்றும் ரயில் போக்குவரத்து போன்ற அத்தியாவசிய சேவைகள் கூட பாதிக்கப்பட்டன. அதுமட்டுமல்லாது வீடுகளிலும் பொதுமக்கள் கடந்த 5 தினங்களாக மின்சாரம் இல்லாமல் மிகவும் அவதிக்குள்ளாயினர்.
இந்நிலையில் பாய்லின் புயலும் ஆந்திரா நோக்கி வருவதால், மக்களுக்கு மேலும் கூடுதல் சிரமங்கள் ஏற்படும் என்றும், இதனால் மனிதாபிமானத்துடன் போராட்டத்தை விடுமாறும் முதல்வர் கிரண் குமார் ரெட்டி மின் ஊழியர்களை கேட்டுக்கொண்டார். மேலும் போராட்டத்தை கைவிடாவிட்டால் 'எஸ்மா' சட்டம் பாயும் என்றும் எச்சரிக்கப்பட்டதாக தெரிகிறது.
இந்நிலையில் மின் ஊழியர்கள் போராட்டத்தை கைவிட முடிவு செய்து, போராட்டத்தை விலக்கி கொள்வதாக அறிவித்தனர். இந்த அறிவிப்பினார் ஆந்திர மாநில மக்கள் நிம்மதி பெருமூச்சு விடத் தொடங்கியுள்ளனர்.
-
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி!












Click it and Unblock the Notifications