இன்போசிஸ் நிறுவனத்தில் இருந்து அடுத்தடுத்து முக்கிய நிர்வாகிகள் ராஜினாமா..
இன்போசிஸ் நிறுவனத்தில் கடந்த சில மாதங்களில் அடுத்தடுத்து முக்கிய பொறுப்பு வகித்தவர்கள் ராஜினாமா செய்துள்ளனர்.
டெல்லி: இன்போசிஸ் நிறுவனத்தில் இருந்து மேலாண் இயக்குனர் விஷால் சிக்கா இன்று ராஜினாமா செய்துள்ளார்.
அந்நிறுவனத்தில் இருந்து கடந்த சில மாதங்களில் அடுத்தடுத்து முக்கிய பொறுப்புக்களில் இருப்பவர்கள் ராஜினாமா செய்து வருகின்றனர்.
இன்போசிஸ் நிறுவனத்தில் மேலாண் இயக்குனராகவும், தலைமைச் செயல் இயக்குனராகவும் இருந்தவர் விஷால் சிக்கா.

விஷால் சிக்கா
அவர் தன்னிடம் இருந்த 2 பதவிகளையும் ராஜினாமா செய்துள்ளார். இன்போசிஸ் நிறுவனத்தில் ஏற்பட்டுள்ள தனிப்பட்ட விமர்சனங்களுக்குக்காக விஷால் சிக்கா ராஜினாமா செய்துள்ளார் என்று கூறப்படுகிறது.

அனிர்பன் தே
கடந்த சில மாதங்களாகவே இன்போசிஸ் நிறுவனத்தில் முக்கிய பொறுப்புக்களில் இருக்கும் பலர் ராஜினாமா செய்து வருவது தொடர்கதையாகிவிட்டது. 2015ம் ஆண்டு இன்போசிஸ் நிறுவனத்தில் இணைந்த அனிர்பன் தே எட்ஜ் புராடக்ஸின் தலைமைப் பொறுப்பில் இருந்து கடந்த மாதம் ராஜினாமா செய்தார்.

யூசுப் பஷீர்
அதே போன்று, இன்போசிஸ் இனோவேஷன் பண்ட்டின் மேலாண் இயக்குநராக 2015ம் ஆண்டு பணியில் சேர்ந்த யூசுப் பஷீரும் தனது பதவியை கடந்த மாதம் ராஜினாமா செய்தார். 2 ஆண்டுகள் நிறுவனத்தில் பணி செய்த நிலையில் அவர் ராஜினாமா செய்தார்.

ரித்திகா சூரி
2014ம் ஆண்டு விஷால் சிக்காவால் இன்போசிஸ் நிறுவனத்தில் எக்ஸிக்யூட்வ் வைஸ் பிரசிடெண்டாக கொண்டு வரப்பட்டவர் ரித்திகா சூரி. அவரும் கடந்த மாதம் இந்தப் பொறுப்பில் இருந்து விலகினார். இந்தியாவின் மிகப் பெரிய நிறுவனங்களில் 2ம் இடத்தில் உள்ள இன்போசிஸ்ஸில் அடுத்தடுத்து முக்கிய நிர்வாகிகள் ராஜினாமா செய்து வருவது குறிப்பிடத்தக்கது.
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications