காஷ்மீரில் போலி என்கவுண்ட்டரை கண்டித்து போராட்டம்- யாசின் மாலிக், மஸ்ரத் ஆலம் கைது!!
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் ராணுவம் மற்றும் போலீசார் இணைந்து நடத்திய போலி என்கவுண்ட்டரைக் கண்டித்து நடந்த போராட்டத்தில் பங்கேற்க சென்ற பிரிவினைவாத தலைவர்கள் யாசின் மாலிக், மஸ்ரத் ஆலம் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள டிரால் பகுதியில் ராணுவம் மற்றும் போலீசார் இணைந்து நடத்திய என்கவுண்ட்டரில் காலித் முஸாபர் என்பவர் சுட்டுக்கொல்லப்பட்டார். இதில் இறந்தவர் தீவிரவாதி அல்ல என்றும், இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்தும் இங்குள்ள டிரால் பகுதியில் இன்று ஆயிரக்கணக்கான மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்பதற்காக புறப்பட்டு வந்த ஜம்மு-காஷ்மீர் விடுதலை முன்னணி இயக்கத்தலைவர் யாசின் மாலிக், மற்றொரு தலைவரான ஒருவரான மஸரத் ஆலம் உள்ளிட்டோரை கைது செய்த போலீசார் அவர்கள் அனைவரையும் தடுப்புக் காவலில் அடைத்து வைத்துள்ளனர்.
இதனிடையே போராட்டம் நடைபெற்ற டிரால் பகுதியில் பாதுகாப்புக்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த போலீசார் மீது சிலர் கற்களை வீசி தாக்கினர். இதனால் போராட்டக் களம் வன்முறைக் களமாக மாறியது.
வன்முறையாளர்களை விரட்டியடிக்கும் விதமாக போலீசார் தடியடி, கண்ணீர்ப்புகை மற்றும் ரப்பர் குண்டுகளை பயன்படுத்தினர். இதில் 6 பேர் காயமடைந்தனர்.
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications