அய்யோ பாவம்.. மேகாலயாவை மேப் போட்டு யோசித்த மம்தாவுக்கு.. சொந்த மாநிலத்தில் சோகம்
கொல்கத்தா: மேற்கு வங்காளத்தில் நடந்த இடைத்தேர்தலில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி, இடதுசாரிகள் ஆதரவு பெற்ற காங்கிரஸ் வேட்பாளர் பெருவாரியான வாக்குகளுடன் வெற்றி பெற்றார். இது ஆளும் மம்தா தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
மேற்கு வங்காளத்தில் சாகர் திகி தொகுதியில் இடதுசாரிகள் ஆதரவு பெற்ற காங்கிரஸ் வேட்பாளர் பைரான் பிஸ்வா, ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர் தபேசிஸ் பண்டபத்தாய்வைவிட சுமார் 24 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார். திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு இந்த தோல்வி மிகப்பெரிய பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
சாகர்திகி சட்டமன்றத் தொகுதி மேற்கு வங்கத்தின் முர்ஷிதாபாத் மாவட்டத்தில் உள்ளது. கடந்த ஆண்டு டிசம்பரில் இந்த தொகுதியில் மூன்று முறை டி.எம்.சி எம்.எல்.ஏவாகவும் மாநில அமைச்சராகவும் இருந்த சுப்ரதா சஹா மரணம் அடைந்தார். இதன் காரணமாக சாகர் திகி தொகுதியில் இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது.

காங்கிரஸ் போட்டி
இதில் இடதுசாரிகள் ஆதரவுடன் காங்கிரஸ் வேட்பாளர் பைரான் பிஸ்வா போட்டியிட்டார். ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி சார்பில் தபேசிஸ் பண்டபத்தாய் போட்டியிட்டார். பாஜக சார்பில் திலிப் சாகா போட்டியிட்டார். இந்த இடைத்தேர்தலில் வென்றே ஆக வேண்டும் என ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி பெரிய அளவில் போராடியது. அதேநேரம் காங்கிரஸ் கட்சியும் கடுமையாக போராடியது.

முதலிடம் யார்
பிரச்சாரங்கள் விறுவிறுப்பாக நடந்தது. இதையடுத்து கடந்த பிப்ரவரி 27ம் தேதி தேர்தல் நடந்தது. இதில் 73 சதவீதம் வாக்குகள் பதிவானது. அதாவது 2.3லட்சம் பேர் வாக்களித்தனர். இதில் காங்கிரஸ் வேட்பாளர் பைரான் பிஸ்வா 87666 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். . திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர் 64681 வாக்குகள் பெற்று இரண்டாவது இடத்தை பிடித்தார். பாஜக வேட்பாளர் திலிப் சாகா 25815 வாக்குகள் பெற்று மூன்றாவது இடத்தையே பிடித்தார்.

திரிணாமுல் 2ம் இடம்
இந்த தேர்தலில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியும், எதிர்க்கட்சியான பாஜகவும் முறையே இரண்டாவது மற்றும் 3வது இடத்தையே பிடித்துள்ளன. காங்கிரஸ் இடதுசாரிகள் கூட்டணி மேற்கு வங்காளத்தில் மட்டுமல்ல, திரிபுரா, மேகலயாவிலும் ஓரளவு ஒர்க்அவுட் ஆகி உள்ளது. கேரளாவை தவிர மற்ற அனைத்து மாநிலங்களிலும் காங்கிரஸ் கட்சி இடதுசாரிகள் கூட்டணி அமைத்து 2024ல் தேர்தலை சந்திப்பதற்கு அதிக வாய்ப்பு இருப்பதை காட்டுவதாக அரசியல் நிபுணர்கள் கூறுகிறார்கள்.

மேகாலயாவில் மம்தா
இதனிடையே மம்தா பானர்ஜிக்கு சொந்த மாநிலத்தில் தோல்வி கிடைத்தாலும் மேகாலயாவில் நல்ல வெற்றி கிடைத்துள்ளது. காங்கிரஸ், பாஜகவை காட்டிலும் மம்தாவின் திரிணாமுல் காங்கிரஸ் சிறப்பான வெற்றியை பெற்றுள்ளது. பாஜக மூன்று தொகுதிகளிலும் காங்கிரஸ் 5 தொகுதிகளிலும் முன்னிலை வகித்து வரும் நிலையில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியும் 5 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.












Click it and Unblock the Notifications