மும்பை அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கரத் தீ விபத்து !! 7 பேர் மூச்சுத் திணறி பலி !!!
மும்பை : 21 தளங்கள் கொண்ட குடியிருப்பில் நிகழ்ந்த தீ விபத்தில் 7 பேர் மூச்சுத் திணறி உயிரிழந்தனர். 25 க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
புறநகரான சாந்திவிலி அருகே போவாய் பகுதியில் இந்த தீ விபத்து நிகழ்ந்தது. அங்குள்ள குடியிருப்பின் 14 வது தளத்தில் தீ விபத்து ஏற்பட்டது.

இதனால் எழுந்த புகை அதற்கு மேல் உள்ள தளங்களையும் ஆக்கிரமிக்க, அந்த தளங்களில் வசித்தவர்கள் வெளியேற முடியாமல் தவித்தனர்.
தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் 15 க்கும் மேற்பட்ட வாகனங்களில் விரைந்து சென்று பல மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். சுவாசிக்க திணறி தவித்தவர்களை நவீன ஏணியைப் பயன்படுத்தி தீயணைப்புத் துறையினர் மீட்டனர்.
எனினும் மேல் தளங்களில் வசித்தவர்களில் 7 பேர் சுவாசிக்க முடியாமல் உயிரிழந்தனர். மேலும் 25 க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால், பலி எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது. இந்த தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக தீயணைப்பு துறையினர் மற்றும் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications