பதன்கோட் தீவிரவாத தாக்குதலில் வீரமரணம் அடைந்த 7 தேசிய ஹீரோக்கள்
டெல்லி: பதன்கோட் விமானப்படைத்தளத்தில் தீவிரவாதிகளுடனா மோதலில் இதுவரை 7 ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்துள்ளனர். தேசிய ஹீரோக்களாக மாறியுள்ள அந்த ராணுவ வீரர்களின் உடல்கள் இன்று தகனம் செய்யப்படுகின்றன.
ஹீரோக்கள் வாழ்க்கை பற்றிய ஒரு பார்வை: கேரளாவின் பாலக்காட்டை சேர்ந்தவர் லெப்டினன்ட் கர்னல் நிரஞ்சன் குமார். வெடிகுண்டு அகற்றும் பிரிவில் பணியாற்றி வந்தார். கிரானைட் குண்டு ஒன்றை செயலிழக்க செய்ய முயன்றபோது அது வெடித்ததில் நிரஞ்சன் வீர மரணம் அடைந்தார். அவரது உடல் பெங்களூரிலுள்ள வீட்டில் வைக்கப்பட்டுள்ளது. இன்று மாலை சொந்த ஊரில் உடல் அடக்கம் செய்யப்படுகிறது.

பாதுகாப்பு கமாண்டோ, குருசேவக் சிங், முதல்கட்ட துப்பாக்கி சூட்டின்போது உயிரிழந்தார். குண்டடி பட்ட நிலையிலும், மீண்டும் தீவிரவாதிகளை நோக்கி சுட்டபடி தீரத்தோடு முன்னேறியுள்ளார் குருசேவக்சிங். மருத்துவர்கள் அவரை நெருங்குவதற்குள்ளாக வீர மரணம் அடைந்தார். இவர் பஞ்சாப் மாநிலம் அம்பாலா நகரை சேர்ந்தவர். ஒரு மாதத்திற்கு முன்புதான் திருமணம் நடைபெற்றுள்ளது.
வீரமரணம் அடைந்த, 51 வயதான பாதுகாப்பு படை சுபேதாரான, பட்டே சிங் சூட்டிங்கில் சாம்பியன். 2 வருடங்கள் முன்புதான் பதன்கோட்டில் அவருக்கு பணியிடம் கொடுக்கப்பட்டுள்ளது. 1995ம் ஆண்டு, டெல்லியில் நடந்த காமன்வெல்த் போட்டியில், துப்பாக்கி சுடுதலில், தங்கம் மற்றும் வெள்ளி பதக்கங்களை வென்றவர், பட்டேசிங். பஞ்சாப்பின், குருதாஸ்பூரை சேர்ந்தவர்.
வீரமரணம் அடைந்த, ஹவில்தார் வீரரான குல்வந்த் சிங், குருதாஸ்பூரை சேர்ந்தவராகும். மற்றொரு ராணுவ வீரரான ஜெகதீஷ், தீவிரவாதிகளில் ஒருவனை பின்தொடர்ந்து சென்று, அவனது துப்பாக்கியை பிடித்து இழுத்துள்ளார். அப்போது ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில், துப்பாக்கி வெடித்ததில், ஜெகதீஷ் வீரமரணம் அடைந்தார். வீரமரணம் அடைந்த மற்றொருவர் சஞ்சிவ் குமார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications