மகாராஷ்டிரா தொழிற்சாலையில் விஷவாயு தாக்கி 7 தொழிலாளர்கள் பலி
Subscribe to Oneindia Tamil
லத்தூர்: மகாராஷ்டிரா தொழிற்சாலையில் கழிவு நீர் தொட்டியில் சுத்தம் செய்யும் பணியின்போது விஷவாயு தாக்கி 7 தொழிலாளர்கள் பலியாகியுள்ளனர்.
மகாராஷ்டிர மாநிலம் லத்தூரில் ஆயில் மில் தொழிற்சாலை ஒன்று உள்ளது. இந்த தொழிற்சாலையின் கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்யும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டனர். அப்போது அந்த தொட்டியில் இருந்து விஷவாயு தாக்கியது.

இந்த விபத்தில் தொழிலாளர்கள் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து மீட்பு பணிகளை மேற்கொண்டனர். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications