அசாமில் 300 அடி 'எலி வளை' சுரங்கத்தில் புகுந்த தண்ணீர்.. தொழிலாளர்கள் பலர் சிக்கியிருக்கலாம்! அச்சம்
கவுகாத்தி: வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான அசாமில், எலி வளை சுரங்கத்திற்குள் தண்ணீர் புகுந்ததில் நிலக்கரி வெட்டி எடுக்கும் தொழிலாளர்கள் பலர் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. 300 அடி ஆழம் கொண்ட இந்த சுரங்கத்திற்குள் தொழிலாளர்கள் பலர் சிக்கியிருக்கலாம் என அச்சம் ஏற்பட்டுள்ளதால் மீட்புக்குழுவினர் ஸ்பாட்டிற்கு விரைந்துள்ளனர்.
வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான அசாமின் ஊரக பகுதியான உம்ரன்க்ஸோ என்ற இடத்தில் நிலக்கரி சுரங்கம் உள்ளது. 300 அடி ஆழம் கொண்ட இந்த சுரங்கத்தில், நிலக்கரியை வெட்டி எடுக்கும் பணியில் தொழிலாளர்கள் பலர் ஈடுபட்டுள்ளனர். ரேட் ஹோல் (எலி வளை) எனப்படும் மிக ஆபத்தான டெக்னிக்கை பயன்படுத்தி இந்த சுரங்கத்தில் நிலக்கரி வெட்டி எடுக்கப்படுகிறது.

சுரங்கத்துக்குள் 100 அடிக்கு தண்ணீர்
மேகாலயா மாநில எல்லையை ஒட்டியுள்ள இடத்தில் அமைந்து இருக்கும் நிலக்கரி சுரங்கத்திற்குள் தண்ணீர் புகுந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சுரங்கத்தில் சுமார் 100 அடிக்கு தண்ணீர் இருப்பதாக கூறப்படும் நிலையில், இதில் தொழிலாளர்கள் பலரும் சிக்கியிருக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது. இது குறித்த தகவல் கிடைத்ததும் உடனடியாக போலீசாரும் மீட்புக்குழுவினரும் நிகழ்விடத்திற்கு விரைந்துள்ளனர்.

15 தொழிலாளர்கள் சிக்கினர்
முன்னதாக கடந்த 2018 ஆம் ஆண்டு மேகாலயா மாநிலத்தின் கிழக்கு ஜைண்டியா மலை மாவட்டத்தில் சட்ட விரோதமாக செயல்பட்டு வந்த நிலக்கரி சுரங்கத்திற்குள் தண்ணீர் புகுந்தது. அருகில் இருந்த ஆற்றில் இருந்து வெளியேறிய நீர், சுரங்கத்திற்குள் புகுந்தது. இதில், 15 தொழிலாளர்கள் சிக்கினர். மீட்பு பணிக்கு சென்ற மீட்புக்குழு வெறும் இரண்டு பேரின் சடலத்தை மட்டுமே பார்க்க முடிந்ததாக அப்போதய மீட்புக்குழு தலைவர் எஸ்கே சாஸ்திரி கூறினார்.
மேகாலயாவில் சட்ட விரோதமாக நிலக்கரி சுரங்கங்கள் ஆயிரக்கணக்கான எண்ணிக்கையில் செயல்பட்டு வருகின்றன. சட்ட விரோத சுரங்கங்களை கட்டுப்படுத்த தவறியதாக மேகாலயா அரசுக்கு ரூ.100 கோடி அபராதத்தை தேசிய பசுமை தீர்ப்பாயம் கடந்த 2019 ஆம் ஆண்டு விதித்தது.
எலி வளை சுரங்க பணி என்றால் என்ன?
எலி வளை சுரங்க பணி என்பது சிறிய குழிகளை தோண்டி, அதற்குள் சென்று நிலக்கரியை வெட்டி எடுப்பதாகும். சுமார் 4 அடி அகலம் கொண்ட இந்த சுரங்கத்திற்குள், தொழிலாளர்கள் கைகளால் நிலக்கரியை வெட்டி எடுப்பார்கள். இது மிகவும் ஆபத்தானது என்பது மட்டும் இன்றி சுற்றுச்சூழலுக்கும் தீங்கு விளைவிக்கக் கூடியது என்பதால் கடந்த 2014 ஆம் ஆண்டு தேசிய பசுமை தீர்ப்பாயம் இதற்கு தடை விதித்தது.
-
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்?












Click it and Unblock the Notifications