சமாஜ்வாடி பிரமுகர் வீட்டில் விபச்சாரம் - 9 பெண்கள் மீட்பு, 5 ஆண்கள் கைது
கான்பூர்: உத்தர பிரசேத்தில் வாடகை வீட்டில் விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட 9 பெண்களை போலீஸார் மீட்டனர். அவர்களை அந்த தொழில் செய்ய வைத்த 5 ஆண்களை போலீசார் இன்று கைது செய்துள்ளனர்.
உத்தர பிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள கல்யாண்பூர் பகுதி ஈக்கோ பார்க் அருகே சைலேந்திர குப்தா என்கிற தீபக் தங்கியிருக்கும் வாடகை வீட்டில் விபச்சாரம் நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து போலீசார் இன்று காலை அந்த வீட்டிற்கு சென்று அதிரடி சோதனை நடத்தி விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட 9 பெண்கள் மற்றும் அவர்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்திய தீபக், சாஹில், சித்தார்த் சர்மா, முனி ஸ்ரீவஸ்தவா, ராஜு ஆகிய 5 பேரை கைது செய்தனர்.
தீபக்கின் வீட்டு வாசலில் உள்ள பெயர் பலகை ஆளும் சமாஜ்வாடி கட்சி கொடியின் நிறமான சிவப்பு, பச்சை நிறத்தில் இருந்தது. மேலும் பெயர் பலகையில் சைலேந்திரா, பொதுச் செயலாளர், உத்தர பிரதேச உத்யோக் வியாபார் சங்கதன் என்று எழுதியிருந்தது.
இது குறித்து எஸ்.பி. சுரேந்திர திவாரி கூறுகையில்,
பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த பெண்களை அந்த வீட்டிற்கு அழைத்து வரப்பட்டு கட்டாயப்படுத்தி விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்றார்.
கைது செய்யப்பட்ட பெண்கள் மேற்கு வங்கம், மத்திய பிரதேசம் மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்தவர்கள்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications