மும்பையில் புகைப்பட பத்திரிக்கையாளரை பலாத்காரம் செய்த 3 பேருக்கு தூக்கு

Subscribe to Oneindia Tamil

மும்பை: மும்பை சக்தி மில்ஸ் வளாகத்தில் பெண் புகைப்பட பத்திரிக்கையாளரை பாலியல் பலாத்காரம் செய்த 3 பேருக்கு மும்பை நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 22ம் மும்பை சக்தி மில்ஸ் பகுதிக்கு தன்னுடன் பணிபுரியும் ஆணுடன் சென்ற 23 வயது பெண் புகைப்பட பத்திரிக்கையாளரை 5 பேர் கட்டி வைத்து பாலியல் பலாத்காரம் செய்தனர். இந்த வழக்கில் விஜய் ஜாதவ், காசிம் பெங்காளி, சலீம் அன்சாரி, சிராஜ் ரஹ்மான் மற்றும் மைனர் ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டனர். அதில் சிராஜ் ரஹ்மானுக்கு ஆயுள் தண்டனை கிடைத்தது. மைனர் சிறையில் அடைக்கப்பட்டார்.

Shakti Mills gang-rapes: 3 convicts sentenced to death for repeat offence

இதைத் தொடர்ந்து அதே சக்தி மில்ஸ் வளாகத்தில் தானும் பலாத்காரம் செய்யப்பட்டதாக டெலிபோன் ஆபரேட்டர் பெண் ஒருவர் தெரிவித்தார். அவரை சீரழித்த வழக்கில் விஜய் ஜாதவ், காசிம் பங்காளி மற்றும் சலீம் அன்சாரிக்கு ஆயுள் தண்டனை கிடைத்தது. அந்த மூன்று பேரும் சக்தி மில்ஸ் வளாகத்தில் குடித்துவிட்டு குற்றங்கள் செய்து வந்தது நிரூபனம் ஆனது.

இந்நிலையில் மீண்டும் மீண்டும் தவறு செய்த விஜய் ஜாதவ், காசிம் பங்காளி மற்றும் சலீம் அன்சாரிக்கு மும்பை நீதிமன்றம் மரண தண்டனை விதித்து இன்று தீர்ப்பளித்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+