ராகுலை 'இளவரசர்' என்று அழைக்கக் கூடாது என்றால் 'மன்னர்' என்று அழைக்கலாமா?: பாஜக
மும்பை: ராகுல் காந்தியை குஜராத் முதல்வர் மோடி இளவரசர் என்று அழைப்பதற்கு காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளதே, அப்படி என்றால் அவரை மன்னர் என்று அழைக்கலாமா என பாஜக கேள்வி எழுப்பியுள்ளது.
குஜராத் முதல்வரும், பாஜகவின் பிரதமர் வேட்பாளருமான நரேந்திர மோடி மேடைகளில் பேசுகையில் காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தியை இளவரசர் என்று அழைத்து வருகிறார். இதற்கு காங்கிரஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. பரம்பரை அரசியலை காங்கிரஸ் நிறுத்தினால் தான் ராகுலை இளவரசர் என்று அழைப்பதை தான் நிறுத்தப் போவதாக மோடி தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இது குறித்து பாஜக செய்தித் தொடர்பாளர் மீனாட்சி லெகி கூறுகையில்,
ராகுலை இளவரசர் என்று அழைக்கக் கூடாது என்றால் மன்னர் என்று அழைக்கலாமா?. பாட்னாவில் மோடியின் பேரணி நடந்த இடத்தில் நடைபெற்ற குண்டுவெடிப்பு சம்பவங்கள் பற்றி அரசு தரப்பும், காங்கிரஸ் தலைவர்களும் பொறுப்பில்லாமல் பேசுகிறார்கள். நம் நாட்டில் இந்தியன் முஜாஹிதீன் வளர மத்திய அரசின் மெத்தனமே காரணம். இந்தியன் முஜாஹிதீன் எந்த குறிப்பிட்ட மதத்திற்காகவும் வேலை செய்யவில்லை. மாறாக நாட்டை பிரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.

குண்டுவெடிப்பு சம்பவம் நடந்தும் மோடி பேரணிக்கு சென்றார். இல்லை என்றால் அது தவறான தகவல் பரவக் காரணமாகிவிடும். மோடிக்கு நாங்கள் சிறப்பு பாதுகாப்பு கேட்டிருந்தோம். அது ஏன் சிறப்பு பாதுகாப்பு ஒரு குறிப்பிட்ட குடும்பத்திற்கு மட்டும் அளிக்கப்படுகிறது? என்றார்.
-
பாஜகவை விட்டு விலகிய முன்னாள் MP நரசிம்மன்.. அண்ணாமலை பேச்சை கேட்டிருந்தா இந்நேரம் பாஜக ஆட்சியாம்! -
அண்ணாமலைக்கும் - விஜய்க்கும் இடையேதான் போட்டி.. உடைத்து பேசிய அமர் பிரசாத் ரெட்டி! -
ஒரு மணி நேரம் நடந்த மீட்டிங்.. ரஜினிகாந்த் மருமகனுக்கு மிகப்பெரிய பொறுப்பை கொடுக்கும் அண்ணாமலை! -
பாஜகவும் திமுகவும் ஒன்னு.. டெல்லிக்கு அதிர்ச்சி கொடுத்த அமர் பிரசாத் ரெட்டி! அண்ணாமலையுடன் ஐக்கியம் -
யூடியூபர் முக்தார் கைது.. அலிசா அப்துல்லா புகாரில் தலைமறைவாக இருந்தவர் மைசூரில் பிடிபட்டார் -
ரஜினிகாந்த் மருமகன் விசாகன்.. அண்ணாமலையின் ‘வி தி லீடர்ஸ்’ இயக்கத்தில் இணையப் போகிறார்? ட்விஸ்ட் -
திராவிட அரசியலை உடைத்த தவெக.. விஜய் வெற்றியால் டென்ஷனான பாஜக? சாணக்கிய அமித்ஷா அடுத்த பிளான் இதுதானா -
தமிழ் பிழைகள் தமிழ்நாட்டையே வெட்கப்பட வைத்துள்ளது.. விஜய்யை விளாசிய வானதி சீனிவாசன்! -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா!












Click it and Unblock the Notifications