லோதா கமிட்டி சிபாரிசு அமல் இல்லை.. அடம் பிடிக்கும் பிசிசிஐ.. சுப்ரீம்கோர்ட் நாளை முக்கிய உத்தரவு

Subscribe to Oneindia Tamil

டெல்லி: லோதா கமிட்டி சிபாரிசை பின்பற்ற வேண்டும், அல்லது உரிய உத்தரவு நாளை பிறப்பிக்கப்படும் என சுப்ரீம் கோர்ட் தெரிவித்தது.

பிசிசிஐயின் நிர்வாகத்தில் மேற்கொள்ள வேண்டிய சீர்திருத்தங்களை மேற்கொள்வதற்காக உச்ச நீதிமன்றத்தால் முன்னாள் தலைமை நீதிபதி ஆர்.எம் லோதா தலைமையிலான குழு அளிக்கப்பட்டது. இந்தக்குழு தனது பரிந்துரைகளை சமீபத்தில் அளித்தது. ஆனால், இந்த பரிந்துரைகளை அமல்படுத்த மறுப்பு தெரிவிப்பதாக பிசிசிஐ மீது குற்றம் சாட்டி கடந்த சில தினங்களுக்கு முன் உச்ச நீதிமன்றத்தில் லோதா குழு அறிக்கை அளித்தது.

Shape up SC tells BCCI- Will pass orders on Lodha panel implementation tomorrow

இந்த நிலையில்,இந்த விவகாரம் குறித்து உச்ச நீதிமன்றத்தில் நிலவர அறிக்கை தாக்கல் செய்துள்ள பிசிசிஐ, லோதா குழு பரிந்துரைகளை அமல்படுத்தவில்லை என்ற குற்றச்சாட்டை நிராகரித்துள்ளது.

சுப்ரீம்கோர்ட் தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்கூர் தலைமையிலான அமர்வு முன்னிலையில் இன்று வழக்கு விசாரிக்கப்பட்டது. லோதா கமிட்டி சார்பில் வாதிட்ட கோபால் சுப்பிரமணியமும், பிசிசிஐ சார்பில் கபில் சிபலும் வாதிட்டனர்.

கபில் சிபல் கூறுகையில், மாநில சங்கங்களுக்கு பிசிசிஐ வழங்கியுள்ள 400 கோடி ரூபாய் வழக்கமான பரிவர்த்தனைதான். லோதா கமிட்டி வழக்கறிஞர் குற்றம்சாட்டுவதை போன்று, லோதா கமிட்டிக்கு எதிராக வாக்களிக்க வழங்கப்பட்ட லஞ்சப் பணம் கிடையாது என்றார்.

நீதிபதி தாக்கூர் கூறுகையில், லோதா கமிட்டி சாதாரண ஒரு குழு கிடையாது. அது, உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி தலைமையிலான குழு. பிசிசிஐக்கு சந்தேகம் இருந்தால் அந்த குழுவிடம்தான் தீர்த்துக்கொள்ள வேண்டும். லோதா கமிட்டி பரிந்துரைக்கு எதிராக பல மாநில கிரிக்கெட் சங்கங்கள் வாக்களித்துள்ளன.

இவ்வாறு வாக்களித்த சங்கங்கள் பிசிசிஐ மூலம் கிடைத்த நிதியை திருப்பி வழங்க வேண்டும். இனிமேலும், அந்த சங்கங்களுக்கு நிதி ஒதுக்கப்பட கூடாது. அல்லது, லோதா கமிட்டி பரிந்துரைக்கு அனைத்து சங்கங்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இவ்வாறு கூறிய நீதிபதி, லோதா கமிட்டி பரிந்துரைகளை அப்படியே ஏற்க தயாரா என கபில் சிபலை பார்த்து கேட்டார். ஆனால் அடம் பிடிக்கும் பிசிசிஐயின் வழக்கறிஞரான கபில் சிபலோ, அப்படி ஒப்புக்கொள்ள முடியாது என்றார்.

இதையடுத்து, இந்த வழக்கில் நாளை சுப்ரீம்கோர்ட் உரிய உத்தரவுகளை பிறப்பிக்கும் என நீதிபதிகள் கூறி, வழக்கை நாளைக்கு ஒத்தி வைத்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+