For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தீவிரவாதி ஹபீஸ் சயீத் போலவே சரத் பவார் பேசுகிறார்... உத்தவ் தாக்கரே குற்றச்சாட்டு

Google Oneindia Tamil News

மும்பை: தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவரும், முன்னாள் மத்திய உணவுத்துறை அமைச்சருமான சரத் பவார் தீவிரவாதி ஹபீஸ் சயீத் போலவே பேசி வருவதாக சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே கருத்து தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் மராட்டிய மன்னர் சிவாஜி மற்றும் பால்தாக்கரேவை மோசமாக சித்தரித்து கருத்து வெளியிட்டதாக மகாராஷ்டிர மாநிலம் புனேவில் ஐ.டி துறை ஊழியர் ஒருவர் படுகொலை செய்யப் பட்டார்.

Sharad Pawar like Hafiz Saeed: Uddhav Thackeray

இப்படுகொலை தொடர்பாக தேசியவாத காங்கிரஸ் கட்சித் தொண்டர்கள் பங்கேற்ற கூட்டத்தில் கருத்து தெரிவித்திருந்த சரத் பவார், 'மோடி தலைமையிலான அரசு ஆட்சி, அதிகாரத்துக்கு வந்த 15 நாட்களில் நாடு முழுவதும் மதவாத காய்ச்சல் பரவி வருகிறது. இதைப்போன்ற மதவாத சக்திகள் மீண்டும் தலைதூக்க தொடங்கி விட்டது' என குற்றம் சாட்டியிருந்தார்.

இந்நிலையில், சரத்பவாருக்கு கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து சிவசேனாவின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான 'சாம்னா'வில் தலையங்கக் கட்டுரை எழுதியுள்ளார் உத்தவ் தாக்கரே. அதில், ‘நாடாளுமன்ற தேர்தலில் தனது கட்சி தோற்ற பின்னர், எப்போது, எதைப் பேசுவார்? என்று யூகிக்க முடியாத நிலைக்கு சரத் பவார் தள்ளப்பட்டுள்ளார். மகாராஷ்டிராவில் ஒருவர் கொல்லப்பட்டதற்கும் மோடியின் அரசுக்கும் என்ன தொடர்பு உள்ளது? ஹபீஸ் சயீத்தைப் போலவே சரத் பவாரும் பேசி வருகிறார்' என உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.

English summary
Hitting back at NCP leader Sharad Pawar who blamed BJP's rise for the recent mob violence in Pune which left an IT professional dead, Shiv Sena chief Uddhav Thackeray today equated him with 26/11 mastermind Hafiz Saeed and said he has "lost his sense of proportion" after the poll debacle.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X