மனைவி மரணம் அதிர்ச்சி: எய்ம்ஸ் மருத்துவமனையில் சசி தரூருக்கு சிகிச்சை
டெல்லி: மனைவி சுனந்தாவின் மரணத்தை தொடர்ந்து நெஞ்சுவலி ஏற்பட்டு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் மத்திய அமைச்சர் சசிதரூ அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.
மத்திய அமைச்சர் சசிதரூர் மனைவி சுனந்தா நேற்று இரவு டெல்லி ஓட்டலில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது உடல் நலக்குறைவால் இறந்தாரா? என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

சுனந்தா தங்கியிருந்த அறையை டெல்லி காவல்துறையினரும், தடயவியல் நிபுணர்களும் முழுமையாக ஆய்வு செய்தனர். பின்னர், சசிதரூர் முன்னிலையில் நள்ளிரவில் அந்த அறையை காவல்துறையினர் சீல் வைத்தனர்.
சம்பவம் நிகழ்ந்த நட்சத்திர உணவு விடுதியில் உள்ள ரகசிய கண்காணிப்புக் கேமராக்களில் பதிவாகி உள்ள காட்சிகளையும் காவல்துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர். மணமான 7 ஆண்டுகளுக்குள் சுனந்தா காலமாகி இருப்பதால் சார்பதிவாளர் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
சுனந்தாவின் உடல், எய்ம்ஸ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.
இந்நிலையில், மனைவி இறந்த துக்கத்தில் இருந்த சசிதரூருக்கு அதிகாலை 3 மணி அளவில் திடீர் நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. உடனடியாக அவர் டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார்.
அதன் பின் சாதாரண சிகிச்சை பிரிவிற்கு அவர் மாற்றப்பட்டார். தற்போது அவர் மருத்துவமனையில் இருந்து சிகிச்சை முடிந்து வெளியேறி விட்டார்.
இது குறித்து எய்ம்ஸ் மருத்துவமனையின் மருத்துவர் டி.கே.சர்மா கூறுகையில், இது முன்னெச்சரிக்கை நடவடிக்கை அல்ல. அவருக்கு சில பிரச்னைகள் உள்ளன. அதற்கு சிகிச்சை அளிக்க வேண்டும். தற்போது அவர் சிகிச்சை முடிந்து மருத்துவமனையில் இருந்து வெளியேறி விட்டார்" என்றார்
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications