சுனந்தாவை விலக்கி விட்டு பாக். செய்தியாளர் மெஹர் தரார மணக்கத் திட்டமிட்ட சசி தரூர்?
டெல்லி: சுனந்தா புஷ்கரை விவாகரத்து செய்து விட்டு, பாகிஸ்தான் பெண் செய்தியாளர் மெஹர் தராரை மணக்க சசி தரூர் திட்டமிட்டிருந்தார் என்று ஒரு செய்தி வெளியாகியுள்ளது.
சுனந்தா புஷ்கர் மரணத்திற்கு சில நாட்களுக்கு முன்புதான் சசி தரூர்- மெஹர் தரார் குறித்த பரபரப்பு விஸ்வரூபம் எடுத்தது.
இந்த விவகாரம் வெடித்துக் கிளம்பிய சில நாட்களிலேயே சுனந்தா மர்மமான முறையில் மரணமடைந்தார். அவரது மரணத்தின் மர்மம் கூட இன்னும் விலகவில்லை. இந்த நிலையில் உண்மையில், மெஹர் தராரை மணக்க சசி தரூர் முடிவு செய்திருந்ததாகவும், இதற்காக சுனந்தாவை விவாகரத்து செய்யவும் அவர் விரும்பியதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

டிவியில் செய்தி
2014ம் ஆண்டு லோக்சபா தேர்தலுக்கு பின்னர் மெஹர் தராரை மணக்க சசி தரூர் ஆயத்தமாகி வந்ததாக சுனந்தாவின் உறவினர்களும், நண்பர்களும், சுனந்தா மரணம் தொடர்பான விசாரணையாளர்களிடம் தெரிவித்ததாக செய்தி சேனல் ஒன்று தெரிவித்துள்ளது.

பல பெண்களுடன் தரூருக்குத் தொடர்பு
மேலும் சுனந்தாவின் நெருங்கிய தோழியும், பத்திரிக்கையாளருமான நளினி சிங், சுனந்தா வீட்டு வேலைக்காரர் நாராயண் சிங் ஆகியோர், சசி தரூருக்கு பல பெண்களுடன் தொடர்பு இருப்பதாக கூறியுள்ளனராம்.

கணவரின் செயலால் கோபமடைந்த சுனந்தா
தனது கணவர் குறித்து அறிய வந்ததும் சுனந்தா ஆத்திரமடைந்து அவருடன் சண்டை பிடித்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் அவர் விரக்தி அடைந்து காணப்பட்டார் என்றும் பெரும் மன உளைச்சலுக்குள்ளானார் என்றும் கூறப்படுகிறது.

துபாய் ஹோட்டலில் 3 நாட்கள் மெஹருடன் தங்கல்
2013ம் ஆண்டு ஜூன் மாதத்தில் மெஹர் தராரை முதல் முறையாக துபாயில் வைத்து சந்தித்தாராம் தரூர். இருவரும் 3 நாட்கள் ஒரு ஹோட்டலில் சேர்ந்து தங்கியிருந்துள்ளனர். இதுதொடர்பான ஆதாரங்களை துபாயைச் சேர்ந்த சுனந்தாவின் நண்பர்கள் திரட்டிக் கொடுத்துள்ளனராம்.

விமானத்தில் கடும் சண்டை
இந்த விவகாரம் தொடர்பாக ஜனவரி 15ம் தேதி திருவனந்தபுரத்திலிருந்து டெல்லிக்கு வந்தபோது விமானத்தில் வைத்தே தரூருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டாராம் சுனந்தா. இதை அத்தனை பயணிகளும் பார்த்துள்ளனர். டெல்லி வந்து சேரும் வரை சண்டை ஓயவில்லையாம்.

ஜனவரி 17ல் மரணம்
இந்த சண்டை நடந்த 2 நாட்களில் அதாவது ஜனவரி 17ம் தேதி இரவு டெல்லி லீலா பாலேஸ் ஹோட்டலில் தான் தங்கியிருந்த 345ம் எண் அறையில் சுனந்தா பிணமாகக் கிடந்தார். அப்போது அருகில் சசி தரூர் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications