For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வசதி எப்படி, ஏதாவது உதவி வேண்டுமா: சிறையில் இந்திராணியை சந்தித்து கேட்ட யு.கே. தூதரக குழு

By Siva
Google Oneindia Tamil News

மும்பை: ஷீனா போரா கொலை வழக்கில் சிறையில் இருக்கும் இந்திராணியை மும்பையில் உள்ள இங்கிலாந்து துணை தூதரக அதிகாரிகள் சந்தித்து பேசியுள்ளனர்.

ஷீனா போரா கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள இந்திராணி முகர்ஜி முதலில் போலீஸ் காவலில் இருந்தார். அதன் பிறகு அவரை செப்டம்பர் மாதம் 21ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க மும்பை நீதிமன்றம் உத்தரவிட்டது.

Sheena Bora murder case: British mission team meets Indrani in jail

இந்நிலையில் மும்பையில் உள்ள இங்கிலாந்து துணை தூதரக அதிகாரிகள் குழு சிறைக்கு சென்று இந்திராணியை சந்தித்து பேசியுள்ளது. சிறையில் இந்திராணிக்கு உள்ள வசதிகள் பற்றி கேட்டறிந்த குழுவினர் ஏதாவது உதவி வேண்டுமா என்று கேட்டுள்ளனர்.

இந்திராணி இங்கிலாந்து குடிமகள் என்பதால் அதிகாரிகள் குழு அவரை சந்தித்து பேசியுள்ளது. முன்னதாக இந்திராணியை சந்திக்க அந்த குழுவிற்கு சிறை அதிகாரிகள் அனுமதி மறுத்ததுடன் மத்திய உள்துறை அமைச்சகத்திடம் அனுமதி பெறுமாறு தெரிவித்தனர்.

இந்திராணி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இங்கிலாந்து குடிமகள் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
A team from the British Deputy High Commission in Mumbai met Indrani Mukerjea, the prime accused in the Sheena Bora murder case, while she is in judicial custody, official sources said.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X