டெல்லியில் ஒரு "பைத்தியக்கார முதல்வர்".: கேஜ்ரிவால் மீது சுஷில்குமார் ஷிண்டே கடும் தாக்கு!

டெல்லியில் டென்மார்க் நாட்டு பெண் பலாத்காரம் செய்யப்பட்ட விவகாரத்திலும், வரதட்சணைக் கொடுமை செய்யப்பட்ட பெண் ஒருவர் உயிரோடு எரிக்கப்பட்ட பிரச்சினையிலும், டெல்லியில் உகாண்டா நாட்டு பெண்கள் தங்கி இருக்கும் ஒரு பகுதியில் போதைப்பொருள் விற்பனை மற்றும் விபசாரம் நடப்பதாக எழுந்த புகார் தொடர்பான பிரச்சனையிலும் போலீசார் உரிய நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என்று மாநில அரசு தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது.
இந்த பிரச்சினையில் 4 போலீஸ் அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மியினர் டெல்லில் தர்ணா போராட்டம் நடத்தினர். இந்நிலையில் பெயரை குறிப்பிடாமல் மத்திய உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே அரவிந்த் கேஜ்ரிவாலை கடுமையாக விமர்சித்து பேசியுள்ளார்.
இந்நிலையில் மகாராஷ்டிரா மாநிலம் ஹிங்கோலியில் பேசிய சுஷில் குமார் ஷிண்டே, நான் கேர்வாடியில் காவல்துறையில் இருந்த போது, எனது திருமணத்திற்கு பின்னர் அங்கு கலவரம் நடந்தை அடுத்து எனது விடுப்பு ரத்து செய்யப்பட்டது.
தற்போது பைத்தியக்கார முதல்வர் (டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்) ஒருவரின் தர்ணாவால் நான் போலீசாரின் விடுமுறையை ரத்து செய்துள்ளேன் என்று கடுமையாக விமர்சித்துள்ளார். ஆனால் அரவிந்த் கேஜ்ரிவாலின் பெயரை அவர் தெரிவிக்கவில்லை.
4 போலீஸ் அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரவிந்த் கேஜ்ரிவால் தர்ணா நடத்திய போது. துணை நிலை ஆளுநர் போராட்டத்தை முடித்துக் கொள்ளுமாறு அரவிந்த் கெஜ்ரிவாலை கேட்டுக் கொண்டார். அப்போது பகர்கஞ்ச் மற்றும் மாளவியநகர் காவல் நிலைய 2 அதிகாரிகளை விடுப்பில் செல்லுமாறு உத்தரவிடப்பட்டது.
இதனை அடுத்து 2 நாள் போராட்டத்தை முடித்துக் கொள்வதாக அரவிந்த் கேஜ்ரிவால் அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications