மகாராஷ்டிரா சட்டசபையில் இன்று பாஜக அரசுக்கு எதிராக வாக்களிக்கப் போகும் சிவசேனா
மும்பை: மகாராஷ்டிரா சட்டசபையில் பாஜக அரசு இன்று கொண்டு வரும் நம்பிக்கை வாக்கெடுப்பின் போது அதற்கு எதிராக வாக்களிக்க சிவசேனா முடிவு செய்துள்ளது.
மகாராஷ்டிரா சட்டசபையில் தேவேந்திர பட்னாவிஸ் தலைமையிலான பாஜக அரசு இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு கோருகிறது. 288 உறுப்பினர்கள் கொண்ட மகாராஷ்டிரா சட்டசபையில் பாஜகவுக்கு 121 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். பாஜக தனது பெரும்பான்மையை நிரூபிக்க அதற்கு கூடுதலாக 24 எம்.எல்.ஏ.க்கள் தேவை. இந்நிலையில் ஆதரவு தொடர்பாக சிவசேனாவுடன் பாஜக நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை.

ஏற்கனவே சட்டசபையில் எதிர்கட்சி இருக்கையில் அமர்ந்துள்ள சிவசேனா தனது 63 எம்.எல்.ஏ.க்களும் இன்று பாஜக அரசுக்கு எதிராக வாக்களிப்பார்கள் என்று தெரிவித்துள்ளது. இந்த தகவலை சிவசேனா மூத்த தலைவர் ராம்தாஸ் கதம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,
நாங்கள் எதிர்கட்சியாக இருக்க முடிவு செய்துள்ளோம். நிலைமையை சரி செய்ய நாங்களும் நேற்று இரவு வரை ஒரு மாத காலமாக முயற்சி செய்தும் பாஜக மாறவில்லை. இந்நிலையில் அரசுக்கு எதிராக வாக்களிக்க முடிவு செய்துள்ளோம். பாஜக மீது வைத்த நம்பிக்கையை இழந்துவிட்டோம் என்றார்.
மாநிலத்தின் நலனை கருதாமல் சிவசேனா இந்த முடிவை எடுத்துள்ளது என்று மகாராஷ்டிரா மாநில நிதி அமைச்சர் சுதிர் முகன்திவார் தெரிவித்துள்ளார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications