ம.பியில் புதிய முதல்வராக மோகன் யாதவை அறிவித்த பாஜக தலைமை.. சிவராஜ் சிங் சொன்னது இதுதான்

Subscribe to Oneindia Tamil

போபால்: மத்திய பிரதேச மாநிலத்தில் சிவராஜ் சிங் சவுகான் தனக்கு மீண்டும் முதல்வர் பொறுப்பு கிடைக்கும் என எதிர்பார்த்து வந்த நிலையில், யாரும் எதிர்பாராத வகையில், மோகன் யாதவ் என்பவரை முதல்வராக தேர்வு செய்ய கட்சி மேலிடம் முடிவு செய்து வலியுறுத்தியுள்ளது.

மத்திய பிரதேசத்தில் உள்ள 230 சட்டசபை தொகுதிகளுக்கும் சேர்த்து ஒரே கட்டமாக கடந்த வம்பர் 17-ல் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இந்த வாக்குகள் டிசம்பர் 3-ந் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில், ஆளும் கட்சியாக இருந்த பாஜக ஆட்சியை தக்க வைத்துக் கொண்டது. பாஜக 163 இடங்களில் அபார வெற்றியைப் பெற்றது. காங்கிரஸ் கட்சியோ வெறும் 66 இடங்களில்தான் வென்றது.

Shivraj Singh Chouhan congratulated Madhyapradessh CM designate Mohan Yadav as a hardworking friend

இதனையடுத்து மத்திய பிரதேசத்தில் புதிய முதல்வர் யார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது. மத்திய பிரதேசத்தில் முதல்வராக இருந்த சிவராஜ் சிங் சவுகானா மீண்டும் முதல்வராக அறிவிக்கப்படுவாரா அல்லது கட்சி தலைமை வேறு யாரையாவது அறிவிக்குமா? என மிகுந்த பரபரப்புடன் தொண்டர்கள் எதிர்பார்த்துக் கொண்டு இருந்தனர். தேர்தல் முடிந்து ஒருவாரம் ஆகியும் பாஜக முதல்வர் யார் என்பதை முடிவு செய்ய முடியாமல் திணறி வந்தது.

மோகன் யாதவிற்கு பதவி: இதற்கு காரணம் சிவராஜ் சிங் சவுகானும் முதல்வர் பதவியை பெற கடுமையான முயற்சிகளை கொண்டார். ஆனால், பாஜக தலைமையோ சிவராஜ் சிங் சவுகானை ஓரம் கட்டிவிட்டு மோகன் யாதவ் என்பவரை முதல்வராக அறிவித்தது. இதையடுத்து மத்திய பிரதேசத்தில் புதிய முதல்வராக விரைவில் மோகன் யாதவ் பதவியேற்க உள்ளார். மத்திய பிர்தேசத்தில் சிவராஜ் சிங் சவுகானுக்கே மீண்டும் முதல்வர பதவி கொடுக்கப்படும் என எதிர்பார்த்து இருந்த அவரது ஆதரவாளர்களுக்கு பாஜகவின் டெல்லி தலைமை எடுத்த முடிவு பெரும் ஷாக்கை கொடுத்தது.

கடினமாக உழைக்கும் நண்பர்: இந்த நிலையில், மோகன் யாதவ் முதல்வராக தேர்வு செய்யப்படது குறித்து முன்னாள் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தனது எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது:- மத்திய பிரதேச முதல்வராக பாஜக சட்டமன்றக் குழு கூட்டத்தால் நாமினேட் செய்யப்பட்டு இருக்கும் மோகன் யாதவிற்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

பிரதமர் மோடியின் வழிகாட்டுதலின் கீழ் மத்திய பிரதேசத்தை வளர்ச்சியின் புதிய உச்சத்துக்கு மோகன் யாதவ் எடுத்து செல்வார் என்று நான் நம்புகிறேன். புதிய பொறுப்பு கிடைத்துள்ள மோகன் யாதவிற்கு பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் கூறிக்கொள்கிறேன்" என்று கூறியுள்ளார். மோகன் யாதவ் கடினமாக உழைக்கும் நண்பர் எனவும் சிவராஜ் சிங் சவுகான் கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+