பாஜகவுடனான கூட்டணியை முறித்தது சிவசேனா- லோக்சபா தேர்தலில் தனித்துப் போட்டி என அறிவிப்பு!
பாஜகவுடனான கூட்டணியை முறித்துக் கொண்டது சிவசேனா.
மும்பை: மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து விலகுவதாக சிவசேனா அதிரடியாக அறிவித்துள்ளது. 2019 மகாராஷ்டிரா சட்டசபை தேர்தல் மற்றும் லோக்சபா தேர்தலில் தனித்துப் போட்டியிடுவோம் எனவும் சிவசேனா அறிவித்துள்ளது.
மும்பையில் சிவசேனாவின் தேசிய செயற்குழுக் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில், 2019-ம் ஆண்டு நடைபெறும் மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் தனித்துப் போட்டியிடுவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அதேபோல 2019-ம் ஆண்டு நடைபெறும் லோக்சபா தேர்தலிலும் பாஜகவுடன் கூட்டணி அமைக்காமல் தனித்தே போட்டியிடுவது எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும் உத்தவ் தாக்கரே மகன் ஆதித்ய தாக்கரே, சிவசேனாவின் தேசிய செயற்குழு உறுப்பினராகவும் தேர்வு செய்யப்பட்டார்.
மத்தியில் ஆளும் பாஜக அரசில் சிவசேனா இடம்பெற்றுள்ளது. மத்திய அமைச்சரவையில் இருந்து விலகுவது குறித்து சிவசேனா எதுவும் தெரிவிக்கவில்லை.
சிவசேனாவின் இந்த அறிவிப்பு பாஜகவுக்கு பின்னடைவு எனக் கூறப்படுகிறது. அதேநேரத்தில் பாஜகவுடன் ஆட்சி பகிர்வு, தொகுதி பேரங்களுக்கான சிவசேனாவின் நாடகம் இது என்பதும் அரசியல் பார்வையாளர்கள் கருத்து,
-
Annamalai: புதிய கட்சியா.. பாஜகவில் நீடிப்பாரா.. நாளை 12 மணிக்கு முடிவை அறிவிக்கும் அண்ணாமலை? -
அண்ணாமலை தொடங்கும் புதிய கட்சி.. இணையும் பிரபல பிஸ்னஸ் மேன், திமுக மாஜி அமைச்சர்? அவங்களா? -
லாஸ்ட் சான்ஸ்.. பாஜக வேண்டவே வேண்டாம்.. அண்ணாமலையை டெல்லியிலேயே லாக் செய்த மேலிடம்.. ஏன் தெரியுமா? -
என் குழந்தையின் முக ஜாடையை தப்பா பேசுறாங்க! முக்தார், சூர்யா சிவா மீது அலிஷா அப்துல்லா புகார் -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
மோடியை சந்தித்த அண்ணாமலை? மீண்டும் தமிழக பாஜக தலைவராக்க டெல்லி தலைமை திட்டம்? -
மம்தாவிற்கு பேரிடி.. 60 எம்எல்ஏக்களை தொடர்ந்து 20 எம்பிக்களை தூக்கும் பாஜக? காலியாகும் தி.காங்கிரஸ் -
பாஜகவில் இருந்து விலகினாரா அண்ணாமலை? அப்படி எதுவும் தகவல் இல்லையே!முழு பூசணிக்காயை மறைத்த நயினார்! -
ரொம்ப அவசரப்படாதீங்க அண்ணாமலை.. அமித் ஷா போட்ட அன்புக் கட்டளை! இன்னும் தமிழ்நாடு திரும்பாதது ஏன்? -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம்












Click it and Unblock the Notifications