வயித்துக்குள்ள எட்டி உதைச்ச சிசு..! கர்ப்பிணி மனைவியின் சடலத்துடன்.. விடிய விடிய சைக்கோ ஞானேஸ்.!
அமராவதி: ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் அருகே 9 மாத கர்ப்பமாக இருந்த மனைவியை கொலை செய்த கணவன் கைது செய்யப்பட்டு இருக்கிறார். திருமணமாகி இரண்டு ஆண்டுகள் இளம்பெண்ணுடன் வசித்து நிலையில் வீட்டில் பார்த்த பெண்ணை திருமணம் முடிப்பதற்காக கர்ப்பிணி என்றும் பாராமல் கொலை செய்தது தெரிய வந்திருக்கிறது. வாழ்வே மாயம் படத்தில் வருவது போல புற்றுநோய் என கூறி மனைவியிடம் இருந்து தப்பிக்க நினைத்தவர் தற்போது கொலையாளியாகி சிறையில் கம்பி எண்ணி வருகிறார்.
ஆந்திராவை அலற விட்டிருக்கிறது இந்த சம்பவம். அடுத்த நாள் குழந்தை பிறக்க இருந்த நிலையில் கர்ப்பிணி பெண்ணின் கதையை முடித்து சிறையில் கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறார் ஞானேஸ்வர். யார் இவர்?
விசாகப்பட்டினம் அருகே மதுரவாடா பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர் தான் ஞானேஸ்வர். கடந்த 2022ஆம் ஆண்டு அனுஷா என்ற இளம் பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இருவரும் வேறு வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் வீட்டில் தெரிந்தால் பிரச்சினையாகி விடும் என வீட்டில் சொல்லவில்லை.

இரண்டு ஆண்டுகளாக திருமண விவகாரத்தை வீட்டிற்கு தெரியாமல் மறைத்து விசாகப்பட்டினத்தில் தங்கி வேலை பார்த்து வருவதாக கூறி சமாளித்து இருக்கிறார். இந்த நிலையில் ஞானேஸ்வருக்கு திருமணம் முடிக்க அவரது பெற்றோர் பெண் பார்த்து இருக்கிறார்கள். தொடர்ந்து ஒரு பெண்ணின் புகைப்படத்தையும் அனுப்பி உள்ளனர். இரண்டு ஆண்டு காதல் கசந்து போக கர்ப்பிணி மனைவியை உதறிவிட்டு புதிய பெண்ணை திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டு இருக்கிறார்.
இந்த நிலையில் ஏதாவது சொல்லி சமாளித்து விடலாம் என நினைத்து தனக்கு புற்றுநோய் வந்திருப்பதாகவும் அதனால் நாம் விவாகரத்து செய்துவிடலாம் எனக் கூறியிருக்கிறார். மேலும் என்னை விட்டு வேறு யாரையாவது திருமணம் செய்து கொண்டு நீ நன்றாக இருக்க வேண்டும் என வாழ்வே மாயம் படத்தில் வரும் கமலஹாசன் போல டயலாக் விட்டிருக்கிறார். ஆனால் அதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த அனுஷா புற்றுநோய் இருந்தாலும் பரவாயில்லை, என்ன இருந்தாலும் பரவாயில்லை, என் இறுதி காலம் வரை உன்னோடுதான் வாழ்வேன் என கூறி இருக்கிறார்.
ஆனால் தனக்கு விவாகரத்து தரவேண்டும் என அனுஷாவிடம் சண்டை போட்டு இருக்கிறார். இந்த நிலையில் 9 மாத கர்ப்பிணியாக இருந்த நிலையில் கடந்த திங்கட்கிழமை குழந்தை பிறக்க இருந்தது. தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்க தனது கணவரோடு சென்றிருக்கிறார் அனுஷா. அப்போது ஆஸ்பத்திரியில் தூங்கிக் கொண்டிருந்தபோது யாரும் இல்லாத நேரத்தில் தலையணையால் அனுஷாவின் முகத்தில் அழுத்தி கழுத்தை நெரித்து கொலை செய்திருக்கிறார். இரவு முழுவதும் சடலத்துடன் அவர் படுத்து உள்ளார்.
தொடர்ந்து காலையில் எழுந்து மனைவி மயக்கமாகிக் கிடப்பதாக கூறியிருக்கிறார். அனுசாவை சோதித்த போது அவர் இறந்தது தெரிய வந்தது. தொடர்ந்து தகவல் அறிந்து வந்த போலீசார் அழுது புலம்பிய ஞானேஸ்வரை பிடித்து விசாரணை நடத்தினர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் வேறு திருமணம் செய்ய அனுஷாவை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். இதை அடுத்து ஞானேஸ்வரை கைது செய்த போலீசார் சிறையில் அடைத்துள்ளனர்.
அனுஷாவின் அழகில் மயங்கி திருமணம் செய்த நிலையில் பெற்றோருக்கு தெரியாமல் மறைத்து விட்டதாகவும் அவரை தனது பெற்றோர் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்பதால் அவரை கொலை செய்துவிட்டு வேறு பெண்ணை திருமணம் செய்ய திட்டமிட்டதாகவும் கூறியிருக்கிறார். கொலையில் அவருக்கு மட்டும் தான் பங்கா அல்லது அவரது குடும்பத்தினருக்கும் பங்கா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
பெரம்பூர் ரயில் நிலையத்தில் சூட்கேஸில் தலையில்லாத சடலம்! மனைவி, ஆண் நண்பரை தட்டி தூக்கிய தனிப்படை -
கொடூரம்.. பெரம்பூர் ஸ்டேஷனில் சூட்கேஸில் இருந்த உடல்.. தலையை செங்கல்பட்டு ஏரியில் மீட்ட போலீசார்! -
சிதம்பரத்தில் ஷாக்! உல்லாசத்திற்கு வர மறுத்த இளம்பெண்ணை கொன்ற முதியவர் கைது! -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம்












Click it and Unblock the Notifications