நான்தான் செஞ்சேன்.. என்னை தூக்கில் போட்டாலும் பிரச்சனையில்லை.. கொல்கத்தா கொடூரன் ஷாக் வாக்குமூலம்
கொல்கத்தா: கொல்கத்தாவில் மருத்துவரை பலாத்காரம் செய்து கொன்ற நபர், தனது குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார். அதோடு அதிர்ச்சி தரும் வாக்குமூலத்தை கொடுத்துள்ளார்.
கொல்கத்தாவில் மருத்துவரை பலாத்காரம் செய்து கொன்ற குற்றத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படும் 33 வயதான சஞ்சோய் ராய் என்ற நபரை போலீசார் கைது செய்துள்ளனர். ராயின் கடந்தகால நடத்தை, முந்தைய திருமண வாழ்க்கையில் மனைவியை கொடுமை செய்தது மற்றும் ஆபாச வீடியோக்கள் பார்த்தது ஆகியவை அவருக்கு மனநல ரீதியாக பாதிப்பை ஏற்படுத்தி இருக்கலாம் என்கிறார்கள்.

இவர் அங்கே தன்னார்வலராக போலீஸார் உடன் இணைந்து செயல்பட்டு உள்ளார். இவர் வெறும் தன்னார்வலர்தான். ஆனால் போலீஸ் குழுக்களில் இருக்கிறார், அங்கே கிடைத்த காண்டாக்ட் மூலம் போலீஸ் கமிட்டி ஒன்றிலும் கூட கமிட்டி உறுப்பினராக இருக்கிறார்.
கிழிந்த புளூடூத் இயர்போன் உள்ளிட்ட ஆதாரங்கள் மூலம் போலீசார் அவரைக் கைது செய்துள்ளனர். இவர் அந்த ப்ளூடூத் ஹெட் செட் உடன் அங்கே சுற்றியதை பலரும் பார்த்து உள்ளனர். இதன் மூலமே அவர் சிக்கி உள்ளார். மூத்த போலீஸ் அதிகாரிகள் மற்றும் மருத்துவமனை அதிகாரிகளுடனான தொடர்பு காரணமாக ராய் பல்வேறு மருத்துவமனை துறைகளுக்கு சென்று பல்வேறு பணிகளை செய்துள்ளார். இது போன்ற ஒரு வாய்ப்பிற்காக அவர் இத்தனை காலம் காத்து இருந்ததாக கூறப்படுகிறது.
வாக்குமூலம்: கொல்கத்தாவில் மருத்துவரை பலாத்காரம் செய்து கொன்ற நபர், தனது குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார். அதோடு அதிர்ச்சி தரும் வாக்குமூலத்தை கொடுத்துள்ளார்.
சிபிஐயிடம் அவர் தந்த வாக்குமூலத்தில், நான் மட்டும்தான் குற்றத்தை தனியாக செய்தேன். நான்தான் குற்றவாளி. நான் செய்ததை சரி என்றெல்லாம் சொல்ல மாட்டேன். நான்தான் தவறு செய்தேன்.. என்னை தூக்கில் போடுங்கள். என்னை தூக்கில் போட்டாலும் தவறுன்னு சொல்ல மாட்டேன். எனக்கு பிரச்சனை இல்லை, என்று வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
ராய் தனது தாய், சகோதரி மற்றும் மனைவியிடம் முன்பு இதேபோல் வன்முறையாக நடந்துகொண்டதையும் ஒப்புக்கொண்டார். ராயின் மாமியார் தனது மகளை ராய் உடல் ரீதியாக துன்புறுத்தியதாக காளிகாட் காவல் நிலையத்தில் அவருக்கு எதிராக முன்பு புகார் அளித்ததாக ஆதாரங்கள் தெரிவிக்கின்றன.
சிக்கிய ராய்: அவர் கட்டிடத்திற்குள் நுழைவது சிசிடிவி கேமராவில் சிக்கிய பின்னர் குற்றத்தில் அவருக்கு தொடர்பு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. சிசிடிவி கேமராவில் அவருடன் வேறு யாரும் இல்லை என்பதை உறுதி செய்ததாக கூறப்படுகிறது.
ஆகஸ்ட் 9 ஆம் தேதி குற்றத்தைச் செய்துவிட்டு அவர் வீடு திரும்பியதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மறுநாள் காலை சடலம் கண்டுபிடிக்கப்பட்டதும், ஊடகங்கள் மரணத்தை முன்னிலைப்படுத்தியதால் அது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அவர் அடிக்கடி RG Kar MCH க்கு செல்வார் என்பது அவரது பக்கத்து வீட்டுக்காரர்களுக்கு தெரியும். எனவே, அவரிடம் சென்று விவரம் கேட்டனர். இருப்பினும், இந்த வழக்கில் தனக்கு எதுவும் தெரியாதது போல காட்டிக்கொண்டார். அவர் எந்த கவலையும் இன்றி அமைதியாக இருந்துள்ளார். 24 மணி நேரத்திற்கு ஒரு குற்றத்தை செய்தது போல அவர் அமைதியாக நடந்து கொண்டுள்ளார் என்று பக்கத்துக்கு வீட்டுக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.
-
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள்












Click it and Unblock the Notifications