பள்ளி செல்ல மறுத்த 10 வயது மகனை அடித்துக் கொன்ற தந்தை கைது
தானே: அம்பர்நாத்தில் பள்ளி செல்ல மறுத்ததற்காக தண்டித்தபோது மகன் பரிதாபமாக பலியான சம்பவத்தில் தந்தை கைது செய்யப் பட்டுள்ளார்.
தானே, அம்பர்நாத் பகுதி பீம் நகர் குடிசைப் பகுதியைச் சேர்ந்த மஜித்கான்(வயது36) என்பவரது மகனான சஜித் அலி(10) அங்குள்ள பள்ளி ஒன்றில் படித்து வந்தான். படிப்பில் கவனம் இன்றி சஜித் பள்ளி செல்ல அடம் பிடித்ததாகக் கூறப்படுகிறது.
இது சம்பந்தமாக சஜீத்தைக் கண்டித்து வந்துள்ளார் மஜித். இந்நிலையில் சமீபத்தில் நடந்த தேர்வில் சஜித் குறைந்த மதிப்பெண்கள் எடுத்ததாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த மஜித் சம்பவத்தன்று இரவு சிறுவன் சஜித் அலியை வீட்டில் இருந்த கம்பை எடுத்து சரமாரியாக அடித்துள்ளார். இதில், பலத்த காயமடைந்த சஜீத் மயக்கமடைந்துள்ளான்.
உடனடியாக சஜீத்தை அவனது உறவினர்கள் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் அங்கு அவனைப் பரிசோதித்த மருத்துவர்கள் சஜித் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து தகவல் அறிந்த சிவாஜி நகர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மஜித் கானை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications