உண்ட வீட்டுக்கு ரெண்டகம்..குளியலறையில் மூன்றாம் கண்! வேலைக்காரன் பார்த்த வேண்டாத வேலை..தாய், மகளுமா?
பாட்னா: இந்தியாவில் நாளுக்கு நாள் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. அதிர வைக்கும் வகையில் ஒடிசா மாநிலத்தில் நடந்த சம்பவம் தான் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. வீட்டில் வேலை பார்த்த வேலைக்கார இளைஞர் அந்த வீட்டின் உரிமையாளரான தாய் மற்றும் மகளை ஆபாச வீடியோ எடுத்து மிரட்டி பல நாட்களாக பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளார். இதை அடுத்து அந்த இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்.
தொழில்நுட்பம் வளர்ந்து விட்ட நிலையில் அது எந்த அளவுக்கு நல்லது செய்கிறதோ, அதே அளவுக்கு பிரச்சனைகளை ஏற்படுத்தி விடுகிறது. வீட்டில் இருந்தாலும் வெளியே இருந்தாலும் ஆயிரம் கண்கள் நம்மை கண்காணிப்பது என்னவோ உண்மைதான்.
குறிப்பாக பெண்கள் மிகுந்த எச்சரிக்கை உணர்வோடு இருக்க வேண்டியது அவசியம். வீடாக இருந்தாலும் வெளி நபர்கள் இருந்தால் மிகுந்த எச்சரிக்கை உணர்வோடு இருக்க வேண்டும் என்பதை உணர்த்தி இருக்கிறது இந்த சம்பவம்.

ஒடிசா மாநிலம் ஜாக்பூர் பகுதியைச் சேர்ந்தவர் சரோஜ் குமார். இவர் தான் உண்ட வீட்டிற்கு ரெண்டகம் செய்து இருக்கிறார். ஒரு வீட்டில் குடும்ப வறுமை காரணமாக சிறுசிறு வேலைகள் செய்திருக்கிறார். தோட்டவேலை, சமையல் வேலை உள்ளிட்ட அனைத்து வேலைகளையும் இவர் தான் பார்ப்பதாக கூறப்படுகிறது. வீட்டின் உரிமையாளர் தொழிலதிபர் என்பதால் அடிக்கடி வெளியூர் செல்வது வழக்கமாம்.
அவரது மனைவியும் மகளும் வீட்டில் இருந்திருக்கின்றனர். அந்த சிறுமி தற்போது பள்ளியில் படித்து வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் வீட்டின் உரிமையாளர் வெளியூருக்கு செல்லும் போதெல்லாம் சரோஜ்குமார் வீட்டின் குளியலறையில் ரகசியமாக செல்போனை பதுக்கி வைத்து தாய், மகள் இருவரும் குளிப்பதை ஆபாசமாக வீடியோ எடுத்திருக்கிறார். தொடர்ந்து தனித்தனியாக இருவர் இடமும் அதனை காட்டி தனது ஆசைக்கு இணங்காவிட்டால் அதனை சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவேன் என கூறி மிரட்டி இருக்கிறான்.
இதனால் இருவரும் அவரது ஆசைக்கு இணங்கி இருக்கின்றனர். தொடர்ந்து அவர்களிடம் தனிமையில் இருந்த வீடியோக்களையும் எடுத்து வைத்ததாக கூறப்படுகிறது. பல நாட்களாக அவர்களை பாலியல் வன்கொடுமை செய்ததோடு நகை பணத்தை கேட்டு மிரட்டியதாக கூறப்படுகிறது. ஒரு கட்டத்தில் சரோஜ்குமாரின் தொல்லை தாங்க முடியாமல் அந்த வீட்டின் உரிமையாளரின் மனைவி இது குறித்து காவல்துறையில் புகார் அளித்தார்.
இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் சரோஜ்குமாரை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்தனர். அவனது செல்போனை பரிசோதித்த போது தான் தாய் மட்டுமல்லாது, மகளையும் பாலியல் வன்கொடுமை செய்து வந்தது தெரிய வந்தது. இதனை அடுத்து அவனை கைது செய்துள்ள போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் சரோஜ்குமார் மட்டும் தான் இந்த சம்பவத்தில் ஈடுபட்டானா? அல்லது இந்த பாலியல் தொல்லை சம்பவத்தில் வேறு யாருக்கும் தொடர்பு இருக்கிறதா எனவும் விசாரணை நடக்கிறது. மேலும் இந்த ஆபாச வீடியோக்களை வாட்ஸாப் மூலம் சிலருக்கு சரோஜ்குமார் அனுப்பியதாகவும் கூறப்படும் நிலையில் அந்த நபர்களின் பட்டியலையும் போலீசார் தயார் செய்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications