காமன்வெல்த் பல்கலைக்கழக வளாகத்தில் கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு! அமெரிக்காவில் தொடரும் துயரம்
நியூயார்க்: அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், நேற்று மீண்டும் மற்றொரு துப்பாக்கிச்சூடு சம்பவம் அரங்கேறியுள்ளது. வர்ஜீனியா காமன்வெல்த் பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்ற இந்த திடீர் தாக்குதலில் சுமார் 7 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
உலக அளவில் துப்பாக்கிகள் அதிகம் பயன்படுத்தும் நாடுகளில் அமெரிக்கா முதல் இடத்தில் இருக்கிறது. இந்நாட்டில் 100 பேரிடம் 120 துப்பாக்கிகள் இருப்பதாக புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. இந்த எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என்கிற அச்சமும் மேலெழுந்திருக்கிறது. கடந்த ஆண்டு மே மாதம் 24ம் தேதி அமெரிக்காவின் உவால்டே பகுதியில் உள்ள பள்ளியில் நடந்த திடீர் துப்பாக்கிச்சூட்டில் சுமார் 21 மாணவர்கள் கொல்லப்பட்டனர்.

இதற்கு முன்னர் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் பொதுமக்கள்தான் அதிக அளவில் உயிரிழந்திருந்தனர். ஆனால் 21 மாணவர்கள் உயிரிழந்திருப்பது அந்நாட்டு மக்களின் மனசாட்சியை உலுக்கியது. தற்போது இந்த சம்பவத்தை தொடர்ந்து பல்கலைக்கழக வளாகத்தில் துப்பாக்கிச்சூடு சம்பவம் அரங்கேறியுள்ளது. இதில் 7 பேர் படுகாயமடைந்துள்ளனர். அதில் 3 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக இரண்டு பேரை காவல்துறையினர் பிடித்து விசாரித்து வருகின்றனர். வளாகத்தில் உள்ள திறந்தவெளியான மன்ரோ பூங்காவில் மாலை 5:13 மணியளவில் இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் நடைபெற்றுள்ளதாக சொல்லப்படுகிறது. இதில் ஈடுபட்டவர்களும் மாணவர்கள்தான் என அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
சிங்கப்பூரில் இந்தியாவை பாராட்டிய அமெரிக்க பாதுகாப்பு துறை அமைச்சர்.. வியந்து போய் சொன்ன விஷயம் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications