பெங்களூர் சிறையில் சொகுசாக இருக்க சசிகலா ரூ2 கோடி லஞ்சம்- விசாரிக்க அதிகாரியை நியமித்த சித்தராமையா!

Posted By:
Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: பெங்களூர் சிறையில் நடைபெற்ற முறைகேடுகள் குறித்து விசாரிக்க முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி வினய்குமார் என்பவரை விசாரணை அதிகாரியாக கர்நாடக முதல்வர் சித்தராமையா நியமித்துள்ளார்.

பெங்களூர் சிறைச்சாலையில் அதிகாரிகள் லஞ்சம் பெற்றுக்கொண்டு மோசடியில் ஈடுபட்டுவருவதாக சிறைத்துறை டிஐஜி ரூபா, காவல்துறை டிஜிபிக்கு எழுதிய கடிதம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Siddaramaiah appointed Vinay Kumar is to probe the irregularities at Bengaluru Central Jail

அதிலும், சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பெங்களூர் மத்திய சிறையிலுள்ள சசிகலாவிடம் ரூ.2 கோடி லஞ்சம் பெற்றுக்கொண்டு அவருக்கு சிறப்பு சலுகைகளை கொடுத்ததாக அந்த கடிதத்தில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

இதுதகுறித்து உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிடப்படும் என்று கர்நாடக முதல்வர் சித்தராமைா நேற்று கூறிிருந்தார். இதனிடையே, விசாரணை அதிகாரியாக கர்நாடகா உள்துறை முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி வினய்குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Karnataka CM Siddaramaiah appointed Retired IAS Officer Vinay Kumar is to probe the irregularities at Bengaluru Central Jail.
Please Wait while comments are loading...