கர்நாடகாவில் இன்று அனைத்து கட்சி கூட்டம்.. சித்தராமையா அவசர அழைப்பு
பெங்களூரு: தமிழகத்திற்கு கூடுதல் நீரை காவிரியில் இருந்து திறந்துவிடும்படி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து, கர்நாடகத்தில் இன்று அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு முதலமைச்சர் சித்தராமையா அழைப்பு விடுத்துள்ளார்.
தமிழகத்திற்கு இன்று முதல் வரும் 27-ம் தேதி வரை தினமும் 6 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கும்படி கர்நாடக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், நான்கு வாரங்களுக்குள் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கவும் மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

இந்த தீர்ப்பு கர்நாடக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் மீண்டும் பெங்களூரு, மைசூரு உள்ளிட்ட நகரங்களில் வன்முறை சம்பவங்கள் வெடிக்க வாய்ப்புள்ளது. சில இடங்களில் கன்னட அமைப்பினர் முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.
இந்நிலையில், முதல்வர் சித்தராமையா பெங்களூரில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அனைத்து கட்சி தலைவர்கள் மற்றும் எம்.பி.க்கள் கூட்டத்திற்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இக்கூட்டத்தில் பா.ஜ.க., மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிகளும் பங்கேற்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.
இந்த கூட்டத்தில், உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வது பற்றி ஆலோசனை நடத்தப்படும் என தெரிகிறது. மேலும், உச்சநீதிமன்ற தீர்ப்பு குறித்து சட்டத்துறை நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
-
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
தமிழ்நாட்டில் பெண்கள், ஆண்களில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட டேட்டா -
கோட் சூட்டிற்கு பதிலாக பட்டு வேஷ்டி சட்டை.. திடீரென டிரஸ் கோடு மாற்றிய முதல்வர் விஜய்! ஏன் தெரியுமா? -
திருச்செந்தூர் முருகன் கோயிலில் அர்ச்சகருக்கு தடை மட்டும் விதிக்கப்பட்டது ஏன்? அமைச்சர் விளக்கம்! -
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
மாஸ் லுக்கில் சிங்கப்பெண் அதிரடிப்படையினர்! முற்றிலும் வேறான சீருடை.. காரணம் இதுதான்! -
தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் நியமனம்! முடிவுக்கு வரும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை -
"22 வயதில் ஐபிஎஸ் - பஞ்சாப்பை சேர்ந்தவர்".. தமிழகத்தின் புதிய டிஜிபி மகேஷ் குமார் அகர்வால் யார்? பின்னணி -
ஆக்ஷனில் இறங்கிய தமிழ்நாடு அரசு.. மதுரையில் 11 கல் குவாரிகள் மூடல்! வெளிச்சத்திற்கு வந்த விதி மீறல்! -
சென்னை மக்களுக்கு நிம்மதி.. கொட்டப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்! -
100 எம்எல்ஏக்கள் ஆதரவு இருந்தும் முதல்வர் பதவியை விட்டு கொடுத்த சித்தராமையா.. ஏன் தெரியுமா? பின்னணி! -
கர்நாடகா முதல்வர் பதவியில் இருந்து விடைபெற்ற சித்தராமையா.. ராஜினாமா செய்த பின் உருக்கமான பதிவு












Click it and Unblock the Notifications