காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கூடாது: மோடியிடம் சித்தராமைய்யா நேரில் வலியுறுத்தல்
டெல்லி: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கூடாது என்று பிரதமர் நரேந்திரமோடியை கர்நாடக முதல்வர் சித்தராமையா சந்தித்து மனு கொடுத்துள்ளார்.

முதல்வர் சித்தராமையா தலைமையில் கர்நாடக மாநில அனைத்துக் கட்சியினர் பிரதமர் மோடியை இன்று சந்தித்தனர்.
அப்போது அவர்கள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கூடாது என வலியுறுத்தி மோடியிடம் சித்தராமைய்யா மனு அளித்தார்.
அதில், காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான வழக்குகள் நிலுவையில் இருக்கும்போது காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட கூடாது என்றும், தற்போதைய மேற்பார்வைக் குழுவே தொடரவேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இந்த சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கர்நாடக எம்.பி.க்கள், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறினர். காவிரி மேலாண்மை வாரியம் தொடர்பாக ஆலோசனை நடந்து வருவதாக மத்திய அரசு தெரிவித்திருப்பதாகவும் அவர்கள் கூறினர்
பிரதமரை சந்திக்கும் முன் செய்தியாளர்களிடம் பேசிய சித்தராமைய்யா,
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவேண்டும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுப்பதாக தெரிவித்தார். இதன்மூலம் கர்நாடகாவில் குறிப்பாக பெங்களூருவில் குநீர் பிரச்சினை ஏற்படும் வாய்ப்புள்ளதாகவும் அவர் கூறினார்.
தமிழகத்தின் கோரிக்கைக்கு செவிசாய்க்கக் கூடாது என்று வலியுறுத்தவே இன்று பிரதமரை சந்தித்துள்ளனர் கர்நாடகவைச் சேர்ந்த அனைத்துக்கட்சிக் குழுவினர். இந்த அனைத்து கட்சிக் குழுவில் வீரப்பமொய்லி, எடியூரப்பா, சதானந்தகெளடா உள்ளிட்டோரும் இடம்பெற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications