For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அரசு அதிகாரியை "சப்"பென்று அறைந்தேனா?: சித்தராமைய்யா விளக்கம்

By Siva
Google Oneindia Tamil News

பெங்களூர்: அரசு அதிகாரி யாரையும் தான் அறையவில்லை என கர்நாடக முதல்வர் சித்தராமைய்யா தெரிவித்துள்ளார்.

கர்நாடக மாநிலம் பெல்லாரியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் அம்மாநில முதல்வர் சித்தராமைய்யா கலந்து கொண்டார். அப்போது அவர் கோபம் அடைந்து பெல்லாரி முனிசிபால் கார்பரேஷன் கமிஷனர் பி.ஜி. ரமேஷை கன்னத்தில் அறைந்துள்ளார் என்று செய்திகள் வெளியாகின.

மேலும் அவர் ரமேஷை அறைவது போன்ற வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் இது குறித்து சித்தராமைய்யா விளக்கம் அளித்துள்ளார்.

Siddaramaiah rejects claims that he slapped a govt official

இது குறித்து அவர் கர்நாடக முதல்வரின் அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் கணக்கில் கன்னட மொழியில் கூறியிருப்பதாவது,

பெல்லாரியில் வால்மிகி பவன் துவக்க விழாவில் முதல்வர் ஒரு அரசு அதிகாரியை அறைந்துவிட்டார் என்று சில தொலைக்காட்சி சேனல்கள் செய்தி வெளியிட்டுள்ளது ஆச்சரியமாகவும், வருத்தமாகவும் உள்ளது.

நான் எந்த அதிகாரியையும் அறையவில்லை என்பதை மக்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன் என்று அதில் தெரிவித்துள்ளார்.

சித்தராமைய்யா தன்னை அறையவில்லை என்று ரமேஷும் தெரிவித்துள்ளார்.

English summary
Karnataka CM Siddaramaiah said that he didn't slap any government officer at an event in Bellary.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X