கன்னடர்கள் மீதான தாக்குதலை தடுத்து நிறுத்துங்கள்... ஜெயலலிதாவுக்கு சித்தராமையா அவசர கடிதம்!
பெங்களூரு: தமிழகத்தில் கர்நாடக மாநிலத்தவர்கள் மீது நடத்தப்படும் தாக்குதலை தடுத்து நிறுத்தக் கோரி அம்மாநில முதல்வர் சித்தராமைய்யா, தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்கு கடிதம் எழுதியுள்ளார்.
உச்சநீதிமன்றத்தின் உத்தரவுப்படிதான் தமிழகத்துக்கு காவிரி நீரை கர்நாடகா திறந்துவிட்டது. ஆனால் இதற்கு கர்நாடகாவில் எதிர்ப்பு கிளம்பி போராட்டம் வெடித்தது. அப்போது தமிழக வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. தமிழ் இளைஞர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இது தமிழகத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

இதனைத் தொடர்ந்து சென்னை மயிலாப்பூரில் உட்லாண்ட் ஓட்டல் மீது இன்று அதிகாலை பெட்ரோல் குண்டு மற்றும் கற்கள் வீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஓட்டலின் வரவேற்பறையில் இருந்த பொருட்கள் மற்றும் கண்ணாடிகளையும் மர்ம நபர்கள் அடித்து உடைத்துள்ளனர்.
மேலும் கர்நாடகத்தில் தமிழர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் இங்கு தாக்குதல் தொடரும் என்ற எச்சரிக்கை கடிதத்தையும் மர்ம நபர்கள் போட்டுச் சென்றுள்ளனர். கர்நாடகாவில் தமிழக இளைஞர் தாக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக ராமேஸ்வரத்தில் கர்நாடக பதிவெண் கொண்ட வாகனங்கள் மீது தமிழ் அமைப்புக்களைச் சேர்ந்த சிலர் தாக்குதல் நடத்தி உள்ளனர். இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக 4 பேரை ராமேஸ்வரம் போலீசார் கைது செய்துள்ளனர்.
நாகை மாவட்டம் சீர்காழி அருகே கர்நாடக பதிவு எண் கொண்ட 2 வாகனங்கள் மீது அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தி இருக்கின்றனர். கர்நாடகாவில் இருந்த தமிழகத்திற்கு சுற்றுலா வந்த ஒரு குடும்பத்தினர் வைத்தீஸ்வரன் கோவில் அருகே வாகனத்தை நிறுத்திவிட்டு சென்றனர்.
இதனிடையே கன்னடர்கள் மீது தமிழகத்தில் தாக்குதல் நடத்தப்படுவதை தடுத்து நிறுத்தக் கோரி, கர்நாடக மாநில முதல்வர் சித்தராமைய்யா, தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்கு கடிதம் எழுதியுள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications