சித்தா, ஆயுர்வேதா படிப்புகளுக்கும் நீட் கட்டாயம்... மத்திய அரசின் அடுத்த அதிரடி!
சித்தா, ஆயுர்வேதா உள்ளிட்ட அனைத்து படிப்புகளுக்கும் அடுத்த ஆண்டு முதல் நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
டெல்லி: ஆயுஷ் துறையின் கீழ் வரும் சித்தா, ஆயுர்வேதா, யுனானி படிப்புகளுக்கும் 2018ம் முதல் நீட் தேர்வை கட்டாயமாக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.
நாடு முழுவதும் இளநிலை மருத்துவம் என்று சொல்லப்படும் எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளில் சேர நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டு அதற்கான தேர்வுகளும் மே 7ம் தேதி நடத்தப்பட்டது. தேர்வு எழுத மாணவர்களை அனுமதித்த முறை, பிராந்திய மொழிக் கேள்வித்தாளில் வேறுபாடு என்று பல குளறுபடிகளில் சிக்கியுள்ளது நடந்து முடிந்துள்ள நீட் தேர்வு.

நீட் தேர்வு அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்த எதிர்ப் தெரிவித்து தமிழகம், குஜராத் மாநில உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதனை எதிர்த்து சிபிஎஸ்இ உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது ,இந்த வழக்குகள் மீதான விசாரணைகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் மத்திய ஆயுஷ் அமைப்பின் கீழ் வரும் அனைத்து மருத்துவ படிப்புகளுக்கும் நீட் நுழைவுத் தேர்வு கட்டாயமாக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மத்திய இணை அமைச்சர் ஸ்ரீபத் யஸோ நாயக் இந்தத் தகவலை தெரிவித்துள்ளார். இதன்படி சித்தா, ஆயுர்வேதம், யுனானி, யோகா உள்ளிட்ட இயற்கை முறையிலான அனைத்து மருத்துவ படிப்புகளுக்கும் 2018 முதல் நீட் தேர்வு கட்டாயமாக்கப்படும் என்று தெரிகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications