1984 கலவரம்: காங்கிரஸார் பெயரைக் கேட்டு ராகுல் வீட்டுக்கு முன்பு சீக்கியர்கள் போராட்டம்
டெல்லி: 1984ம் ஆண்டு சீக்கியர்களுக்கு எதிராக நடந்த கலவரத்தில் பங்கு உள்ள காங்கிரஸாரின் பெயரை தெரிவிக்குமாறு கூறி சீக்கியர்கள் காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தியின் வீட்டுக்கு வெளியே போராட்டம் நடத்தினர்.
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அண்மையில் டைம்ஸ் நவ் செய்தி சேனலுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் தனது பாட்டியும், முன்னாள் பிரதமருமான இந்திரா காந்தி கொல்லப்பட்ட பிறகு டெல்லியில் நடந்த சீக்கியர்களுக்கு எதிரான கலவரத்தில் சில காங்கிரஸாருக்கு பங்கு இருக்கலாம் என்று ஒப்புக் கொண்டார்.

இதையடுத்து அந்த காங்கிரஸாரின் பெயரை தெரிவிக்குமாறு கோரி சீக்கிய அமைப்புகளைச் சேர்ந்த சுமார் 500 பேர் கடந்த வியாழக்கிழமை டெல்லியில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
இந்நிலையில் சீக்கியர்களுக்கு எதிரான கலவரத்தில் யார், யாருக்கு பங்கு இருக்கிறது என்பதை கேட்டு இன்று சீக்கியர்கள் டெல்லியில் உள்ள ராகுல் காந்தியின் வீட்டுக்கு முன்பு கூடி போராட்டம் நடத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
கலவரத்தில் பங்கு உள்ள காங்கிரஸாரின் பெயர்களை தெரிந்து கொள்ள சீக்கியர்கள் தங்கள் போராட்டத்தை தீவிரப்படுத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications