For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

8 சிமி அமைப்பினர் சுட்டுக் கொலை... 6 வாரத்திற்குள் விளக்கம் கேட்டு தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்

சிறையில் இருந்து தப்பியோடிய 8 சிமி அமைப்பினர் மீதான என்கவுண்டர் குறித்து 6 வாரத்தில் விளக்கம் அளிக்க தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

Google Oneindia Tamil News

டெல்லி: அக்டோபர் 30ம் தேதி, சிமி அமைப்பைச் சேர்ந்த 8 பேரை, சிறை பாதுகாவலரை கொன்றுவிட்டு தப்பியதாகக் கூறி மத்திய பிரதேச போலீசார் என்கவுண்டரில் சுட்டுக் கொலை செய்தனர். இதுகுறித்து 6 வாரத்தில் விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

மத்திய பிரதேச மாநிலம் போபாலில் உள்ள மத்திய சிறையில் சிமி அமைப்பினர் அடைக்கப்பட்டிருந்தனர். அவர்களில் 8 பேர் பாதுகாவலரை கொன்றுவிட்டு தப்பியோடியதாக கூறப்பட்டது. பின்னர், தப்பியோடியவர்களை பிடிக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்ட நிலையில், போபாலின் புறநகர் பகுதியில் உள்ள எய்ன்ட்கேதி கிராமத்தில் வைத்து 8 பேரும் கடந்த 30ம் தேதி சுட்டுக் கொல்லப்பட்டனர்.

SIMI encounter: NHRC issues notice to Madhya Pradesh government

இந்த என்கவுண்டர் குறித்து பல்வேறு சர்ச்சைகளை மனித உரிமை ஆர்வலர்கள் எழுப்பி வருகின்றனர். இது ஒரு போலி என்கவுண்டர் என்று சமூக ஆர்வலர்கள் நேரடியாகவே குற்றம் சாட்டியுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, இந்த 8 பேரையும் சுட்டுக் கொன்றதில் எந்த உள்நோக்கமும் இல்லை என்று மத்திய அரசு சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், 8 பேர் என்கவுண்டர் தொடர்பாக ஊடகங்களில் வெளியான செய்திகளின் அடிப்படையில் தேசிய மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து இந்த வழக்கை விசாரிக்க எடுத்துக் கொண்டது.

இதனையடுத்து, 8 பேர் என்கவுண்டரில் கொல்லப்பட்டது தொடர்பாக 6 வாரத்துக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என்று மத்திய பிரதேச மாநில அரசுக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

English summary
The NHRC issued notices to authorities in Madhya Pradesh over the killing of 8 SIMI activists.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X