“கோடான கோடி ரசிகர்களைக் கொண்ட ரஜினி, சிந்துவின் ரசிகரா”... நெகிழ்ந்து கண்ணீர் விட்ட தாயார்
ஹைதராபாத்: கோடான கோடி ரசிகர்களைக் கொண்ட நடிகர் ரஜினி, தன்னை சிந்துவின் ரசிகர் எனக் கூறி இருப்பது தன்னை நெகிழ வைத்து விட்டதாக ரியோ ஒலிம்பிக்கில் வெள்ளி வென்றுள்ள பேட்மிண்டன் வீராங்கனை சிந்துவின் தாயார் பெருமையுடன் கூறியுள்ளார்.
ரியோ ஒலிம்பிக்கில் வெள்ளி வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ளார் பேட்மிண்டன் வீராங்கனை பிவி சிந்து. இவரின் சாதனையை பிரதமர் உட்பட பிரபலங்கள் பலர் பாராட்டி வருகின்றனர்.

அந்தவகையில், நடிகர் ரஜினியும் சிந்துவைப் பாராட்டி தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் அவர், 'சிந்து நான் உங்கள் ரசிகர் ஆகிவிட்டேன்' எனத் தெரிவித்திருந்தார்.
ரஜினிக்கு இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் கோடிக்கணக்கில் ரசிகர்கள் உள்ளனர். ஆனால், அவர் தனது மகளின் ரசிகர் எனக் கூறியுள்ளதால் சிந்துவின் தாயார் விஜயா மகிழ்ச்சி அடைந்துள்ளார்.
இது குறித்து நாளிதழ் ஒன்றிற்கு அவர் அளித்துள்ள பேட்டியில், "நடிகர் ரஜினிகாந்த், சிந்துவை பாராட்டியதோடு 'நான் சிந்துவின் ரசிகராக மாறி விட்டேன்' என்று டுவிட்டரில் பதிவு செய்துள்ளார். அவர் எவ்வளவு பெரிய மனிதர். மிகப்பெரிய நடிகரான அவருக்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் இருக்கும் நிலையில் எனது மகளின் ரசிகர் என்று அவர் குறிப்பிட்டு இருப்பதை படித்ததும் உண்மையிலேயே நெகிழ்ச்சியில் கண்களில் இருந்து கண்ணீர் வந்து விட்டது.
இறுதிப்போட்டி முடிந்ததும் சிந்து என்னிடம் பேசினார். கொஞ்சம் ஏமாற்றத்தில் இருந்தார். அவரிடம் ஆட்டத்தை பற்றி எதுவும் நான் பேசவில்லை. 'கவலைப்படாதே சிந்து. அடுத்த முறை பார்த்துக் கொள்ளலாம். இதுவே பெரிய விஷயம். நீ ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கத்தை கைப்பற்றி எங்களை மட்டுமல்ல, ஒட்டுமொத்த தேசத்தையும் பெருமைப்பட வைத்து விட்டாய்' என்று கூறி தேற்றினேன். அதன் பிறகு அவர் சகஜ நிலைக்கு திரும்பினார்.
அவர் நாளை (திங்கட்கிழமை) தாயகம் திரும்புகிறார். மாநில அரசு அவருக்கு பிரமாண்டமான வரவேற்பு விழாவை நடத்த ஏற்பாடு செய்து வருகிறது. அவர் வீட்டுக்கு வந்ததும் அவருக்கு பிடித்த மைசூர்பாகு, பிரியாணி உள்ளிட்டவை செய்து கொடுப்பேன்' எனத் தெரிவித்துள்ளார்.
சிந்துவின் தாயார் சென்னையில் 18 ஆண்டுகள் இருந்ததால், தமிழ் நன்கு தெரிந்தவர் ஆவார். சிந்துவிற்கும் ஒரு சில தமிழ் வார்த்தைகள் தெரியுமாம். மற்றவர்கள் தமிழில் பேசுவதையும் அவரால் புரிந்து கொள்ள இயலுமாம்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications