Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சிங்கப்பூர் ரிட்டர்ன் ராம் மோகன் நாயுடு! மகப்பேறு விடுப்பு கேட்ட ஒரே ஆண் எம்பி! ஞாபகம் இருக்கா?

Subscribe to Oneindia Tamil

ஆந்திரா: தெலுங்கு தேசம் கட்சியின் சார்பில் கிஞ்சராபு ராம் மோகன் நாயுடு மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் பொறுப்பேற்றுள்ளார். இவரைப் பற்றிய பல சுவாரஸ்யமான தகவல்கள் கிடைத்துள்ளது.

மத்திய அமைச்சராக முறைப்படி பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார் ராம் மோகன் நாயுடு. அவர் பதவியேற்ற அன்று மோடி.3.0 அமைச்சரவையில் இவர்தான் இருப்பதிலேயே இளம் அமைச்சர் என்ற தகவல் அவரைப் பற்றிய ஹைலைட் செய்தியாக ஊடகங்கள் முன்வைத்தன.

Andhra pradesh election result 2024 Ap assembly election result 2024 Chandrababu Naidu Jagan Mohan Reddy

அதனைத் தொடர்ந்து அவர் பொறுப்பேற்ற அன்று 21 முறை 'ஓம் ஸ்ரீராம்' என்று எழுதியதால் ஊடகங்களின் கவனத்தை தன்பக்கம் மீண்டு திருப்பி இருக்கிறார் இந்த இளம் மத்திய அமைச்சர்.

மோடி மூன்றாவது முறையாகப் பதவியேற்றது முதல், அவரைப் பற்றிய செய்திகளைவிடத் தெலுங்கு தேசம் பற்றிய செய்திகள்தான் அதிகம் வெளியாகிவருகின்றன.

காரணம், 18 ஆவது மக்களவையில் இடம்பெற்றுள்ள எம்பிகளின் பணக்கார எம்பி எந்த முதல் இடத்தை தக்கவைத்துள்ளது தெலுங்கு தேசம். அடுத்து இளம் எம்பி பட்டியலும் இதே கட்சிதான் இடம்பிடித்துள்ளது.

ஆக, பல வகைகளில் தனது கட்சியைத் தேசிய அளவில் கவனிக்கவைத்துள்ளார் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு.

மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்கிய நாள் முதல், ராம் மோகன் நாயுடு 'ஓம் ஸ்ரீராம்' எழுதியது வரை டிடிபி இந்திய அரசியலைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளது.

ஒரு காலத்தில் மோடியை மிகக் கடுமையாக விமர்சித்தவர் சந்திரபாபு. அதேபோல 2019 மக்களவைத் தேர்தல் களத்தில் பிரதமர் மோடி, தெலுங்கு தேசம் கட்சியையும் நாயுடுவையும் பற்றி மிக மோசமாக விமர்சித்திருந்தார்.

ஆனால், அந்தப் பகையை எல்லாம் இந்த மக்களவைத் தேர்தல் அறிவிக்கப்படும் வரைதான். அதன்பின்னர் நாயுடுவும் மோடியும் இணைபிரியாத நண்பர்களாகிவிட்டனர்.

ஆந்திராவில் உள்ள 25 மக்களவைத் தொகுதிகளில் 16 இடங்களைத் தெலுங்கு தேசம் கைப்பற்றியுள்ளது. அதன் கூட்டணிக் கட்சிகளான பாஜக மூன்று தொகுதிகளை வென்றுள்ளது. அதேபோல பவன் கல்யாணின் ஜனசேனா கட்சி 2 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
இந்த மாநில சட்டசபையில் மொத்தமுள்ள 175 இடங்களில் தெலுங்கு தேசம் கட்சி 135 இடங்களையும் ஜனசேனா 21 இடங்களையும், பாஜக 8 இடங்களையும் இணைந்து கூட்டாகக் கைப்பற்றியுள்ளன.

லோக்சபா எம்பிக்களின் அடிப்படையில், டிடிபி 2வது பெரிய கட்சியாக என்டிஏ கூட்டணியில் இடம்பிடித்துள்ளது.

இந்தப் பலத்தை வைத்து ஆந்திராவுக்குச் சிறப்பு அந்தஸ்தைப் பெற்றுவிடலாம் என நாயுடு நம்பிக்கையோடு நடைபோடத் தொடங்கி இருக்கிறார்.

Andhra pradesh election result 2024 Ap assembly election result 2024 Chandrababu Naidu Jagan Mohan Reddy

தெலுங்கு தேசம் கட்சியின் சார்பில் கிஞ்சராபு ராம் மோகன் நாயுடுவும் டாக்டர் சந்திர சேகர் பெம்மாசானியும் மத்திய அமைச்சர் மற்றும் இணையமைச்சராக என்.டி.ஏ அமைச்சரவையில் பதவியேற்றுள்ளனர்.

அதுவும் 36 வயதில், ராம் மோகன் நாயுடு பிரதமர் மோடி 3.0 அமைச்சரவையில் மத்திய அமைச்சராகி இருக்கிறார்.

கிஞ்சராபு ராம் மோகன் நாயுடு யார்?

ராம் மோகன் நாயுடு ஆந்திராவின் ஸ்ரீகாகுளம் மக்களவைத் தொகுதியிலிருந்து மூன்று முறை எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டவர். அதாவது 26 வயதிலேயே அவர் எம்பியாகிவிட்டார்.

இந்த முறை ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி வேட்பாளரை எதிர்த்து 327,901 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். இதுவரை மோடி அமைச்சரவையில் இவரது வயதில் வேறு யாரும் மத்திய அமைச்சர் பதவியை வகித்ததில்லை.

ராம் மோகன் நாயுடு எம்பி மட்டுமல்ல; அவர் தெலுங்கு தேசம் கட்சியின் தேசிய பொதுச் செயலாளராகவும் இருக்கிறார். முன்னாள் மத்திய அமைச்சர் கே யர்ரன் நாயுடுவின் மகனான ராம் மோகன் பர்டூ பல்கலைக்கழகத்தில் எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் படித்தவர்.

அதன் பின்னர் லாங் ஐலேண்ட் பல்கலைக்கழகத்தில் வணிக நிர்வாகத்தில் முதுகலைப் பட்டம் பெற்றவர்.
கடந்த 2 நவம்பர் 2012 ஆம் ஆண்டு இவரது தந்தையும், தெலுங்கு தேசம் கட்சியின் மூத்த தலைவருமான யர்ரான் நாயுடு சாலை விபத்து ஒன்றில் உயிரிழந்தார். அப்போது ராம் மோகன் சிங்கப்பூரில் பணிபுரிந்து கொண்டிருந்தார்.

தந்தையும் திடீர் மரணம் ராம் மோகனை அரசியல் வாழ்க்கைக்குள் கொண்டு வந்து தள்ளியது. 2014 ஆம் ஆண்டு 26 வயதில் ஸ்ரீகாகுளம் மக்களவைத் தொகுதியில் முதல் முறையாகப் போட்டியிட்டார். அந்தக் காலகட்டத்தில் இரண்டாவது இளம் எம்பி என்ற கெளரவத்தைப் பெற்றார்.

தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு உடனான அவரது நெருங்கிய தொடர்பு ஸ்ரீகாகுளம் எம்.பி.யின் அரசியலில் எழுச்சியை உறுதி செய்தது.

Andhra pradesh election result 2024 Ap assembly election result 2024 Chandrababu Naidu Jagan Mohan Reddy

எம்.பியாக பதவி வகித்த காலங்களில், ராம் மோகன் பல்வேறு நாடாளுமன்றம் நிலைக்குழுவில் உறுப்பினராக இருந்துள்ளார். 2020 ஆம் ஆண்டு நாடாளுமன்ற உறுப்பினராக அவரது முன்மாதிரியான செயல்பாட்டிற்காக சன்சத் ரத்னா விருதைப் பெற்றார் என்று ஏஎன்ஐ தகவல் கூறுகின்றது.

2021 ஆம் ஆண்டில், பட்ஜெட் அமர்வின் போது ராம் மோகன் தனக்கு ஒன்பது நாட்கள் மகப்பேறு விடுப்பு அளிக்க வேண்டும் என்று கோரினார். அது தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்தார்.

விடுப்பு கோரி மக்களவை சபாநாயகருக்கு அவர் எழுதிய கடிதத்தில், "குழந்தை பராமரிப்பு என்பது தாயின் பொறுப்பாக மட்டும் இருக்கக்கூடாது. குழந்தையின் பராமரிப்பு மற்றும் முன்னேற்றத்தில் சமமான பங்களிப்பாளராக இருக்க வேண்டும் என்பதை நான் எதிர்நோக்குகிறேன்" என்று கூறியிருந்தார்.

நாடாளுமன்றத்தில் மாதவிடாய் சுகாதார கல்வி மற்றும் பாலியல் கல்விக்கு ஒப்புதல் அளித்த முதல் எம்.பி.க்களில் இவரும் ஒருவர். சானிட்டரி பேட்கள் மீதான சரக்கு மற்றும் சேவை வரியை (ஜிஎஸ்டி) நீக்க வேண்டும் என்றும் அவர் வாதிட்டார்.

ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் பேசிய ராம் மோகன் நாயுடு, "ஆந்திராவில் முஸ்லிம்களுக்கு 4 சதவீத இடஒதுக்கீடு அளிக்கப்படும் என்ற தேர்தல் வாக்குறுதியில் தெலுங்கு தேசம் கட்சி உறுதியோடு நிற்கிறது" என்றார்

ஆக, முஸ்லிம் எதிர்ப்பை முன்வைத்து 240 தொகுதிகளைக் கைப்பற்றியுள்ள பாஜக, அதே இஸ்லாமியர்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவோம் என்று தேர்தல் வாக்குறுதி அளித்த கட்சியின் ஆதரவில்தான் ஆட்சி அமைத்துள்ளது.

அதுதான் இந்தியாவின் ஜனநாயகம்!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+