For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தலைவா.. மீண்டும் கம்பீரமாக வலம் வந்த படையப்பா.. நடுக்கும் மூணாறு மக்கள்.. வீடியோ

Google Oneindia Tamil News

மூணாறு: கேரள மாநிலம் மூணாறில் இருந்து -உடுமலைபேட்டை செல்லும் சாலையில் காட்டு யானையான படையப்பா மீண்டும் கம்பீரமாக உலா வந்தது. தர்பார் படத்தில் ரஜினிக்கு போடப்பட்ட தலைவா மியூசிக்கை போட்டு மூணாறுவாசிகள் அதிரவைத்தனர். நல்ல வேளையாக மக்களை யானை ஒன்றும் செய்யவில்லை.

கேரள மாநிலம் மூணாறில் இருந்து -உடுமலைபேட்டை செல்லும் சாலையில் அடிக்கடி வலம் வரும் ஒற்றை காட்டு யானை படையப்பா. இந்த யானை கடந்த 2019ம் ஆண்டு 13 பேரை கொன்றது. கடந்த வருடம் ஏப்ரல் வரை அவ்வப்போது இதனை பற்றி செய்திகள் வந்த வண்ணம் இருந்தன.

மூணாறு கன்னிமலை நயமக்காடு பகுதியில் உலா வரும் படையப்பா, அவ்வப்போது மலைப்பாதையில் சாலைகளில் செல்லும் வாகன ஓட்டிகளை மறித்து பீதிக்குள்ளாக்கி வரும்.

மீண்டும் படையப்பா

மீண்டும் படையப்பா

மூணாறு - மறையூர் சாலையில் திடீரென படையப்பா அவ்வப்போது வந்து சாலை நடுவே நின்றுகொண்டு வாகனங்களை இருபுறமும் செல்லவிடாமல் தடுத்து நிற்கும்.. இதனால் அதிர்ச்சி அடைந்த வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்து வனத்துறைக்கு தகவல் தெரிவித்து, விரட்டிஅடிப்பார்கள். கடந்த ஆண்டு லாக்டவுன் காரணமாக போக்குவரத்து இல்லாத காரணத்தால் படையப்பாவால் பாதிப்பு ஏற்படவில்லை. இந்நிலையில் மீண்டும் போக்குவரத்து தொடங்கி இயல்பு நிலை மூணாறு பகுதியில் திரும்பி உள்ளது.

பாதிப்பு இல்லை

இந்த சூழலில் மூணாறு - உடுமலைப்பேட்டை சாலையில் மீண்டும் படையப்பா யானை நேற்று முன்தினம் முதல் உலாவத் தொடங்கி உள்ளது. அங்குள்ள பெரியவாரை எஸ்டேட், பாக்டரி டிவிஷனில் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் குடியிருப்புக்குள் நேற்று முன்தினம் மாலை காட்டு யானை 'படையப்பா' நுழைந்து கம்பீரமாக வலம் வந்தது. அதிர்ஷ்டவசமாக எவ்வித பாதிப்புகளை ஏற்படுத்தவில்லை.

யானை விரட்டவில்லை

யானை விரட்டவில்லை

பிறகு கன்னியாறு, ரோட்டை கடந்து காட்டுக்குள் சென்றது. இருப்பினும் மூணாறு- -உடுமலைபேட்டை ரோட்டில் படையப்பா யானையால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதை பார்த்த வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்து ஓடினர். அதேநேரம் யானை யாரையும் விரட்டவில்லை

வைரலாகும் வீடியோ

இதற்கிடையே மூணாறுவாசிகள், தர்பார் படத்தில் ரஜினிக்கு போடப்பட்ட தலைவா மியூசிக்கை போட்டு கம்பீரமாக வலம் வருவதாக அதன் வீடியோக்களை ட்விட்டர் பக்கங்களில் வெளியிட்டு வருகிறார்கள். அவை வைரலாகி வருகிறது.

English summary
single elephant padyappa again comes in munnar-marayur road. this elephant killed 13 peoples by attacks in 2019.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X