13 பேரை காவு வாங்கிய படையப்பா யானை.. மூணாறு சாலையில் உலா.. பீதியில் வாகன ஓட்டிகள்
மூணாறு: கேரள மாநிலம் மூணாறு அருகே மலைப்பாதையில் குறுக்கிட்ட ஒற்றை காட்டு யானை வாகனங்களை செல்லவிடாமல் தடுத்து பயமுறுத்தியதால் வாகன ஓட்டிகள் பீதி அடைந்தனர்.
கேரள மாநிலம் மூணாறு மறையூர் சாலையில் சுற்றித்திரிகிறது படையப்பா என்ற பெயர் கொண்ட ஒற்றை காட்டு யானை, இதுவரை 13 பேரை அந்த யானை தாக்கி கொன்றுள்ளதாக அந்த பகுதி மக்கள் சொல்கிறார்கள்.

கடந்த ஒரு வாரகாலமாக கன்னிமலை நயமக்காடு பகுதியில் உலா வரும் படையப்பா, அவ்வப்போது மலைப்பாதையில் சாலைகளில் செல்லும் வாகன ஓட்டிகளை மறித்து பீதிக்குள்ளாக்கி வருகிறது.
செவ்வாய் அன்று மதியம் மூணாறு - மறையூர் சாலையில் திடீரென படையப்பா, சாலை நடுவே நின்றுகொண்டு வாகனங்களை இருபுறமும் செல்லவிடாமல் தடுத்து நின்றது. இதனால் அதிர்ச்சி அடைந்த வாகன ஓட்டிகள் வனத்துறைக்கு தகவல் அளித்தனர்.

தகவலறிந்து வந்த வனத்துறையினர் யானை படையப்பாவை அந்த இடத்தை விட்டு விரட்ட முயன்றனர். ஆனால் முடியவில்லை. சுமார் ஒரு மணி நேரத்துக்கு பிறகு வாகனங்களை செல்லவிடாமல் மிரட்டிய படையப்பா யானை, மெல்ல அந்த இடத்தை விட்டு நகர்ந்து சென்றது.அதன் பிறகே வாகன ஓட்டிகள் நிம்மதியடைந்தனர்.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications