Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இதுதான் "ஸ்போர்ட்ஸ்மேன்ஷிப்".. மைதானத்தில் சிராஜ் செய்த "சம்பவம்".. என்ன மனுஷன்யா! கவனிச்சீங்களா?

பொதுவாக சிராஜ் கடைசி நேரத்தில் இறங்கி சுற்றக்கூடிய நபர். அப்படியே இறங்கி பேட்டை சுற்றி சிக்ஸ், பவுண்டரி என்று அடிக்க கூடியவர்.

Subscribe to Oneindia Tamil

நாக்பூர்: ஆஸ்திரேலியாவிற்கு எதிரான முதல் டெஸ்டில் இன்று சிராஜ் பேட்டிங் செய்த விதம் பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. தனது ஸ்போர்ட்ஸ்மேன்ஷிப்பை வெளிக்காட்டும் விதமாக சிராஜ் இன்று நிதானமாக ஆடினார்.

இந்தியா ஆஸ்திரேலியா இடையிலான முதலாவது பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடர் தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. நாக்பூரில் நடந்து வரும் இந்த போட்டியில் தொடக்கத்தில் ஆஸ்திரேலியா மீது இந்தியா ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா 250 ரன்களாவது எடுக்கும் என்று கிரிக்கெட் வல்லுனர்கள் பலர் கணித்து இருந்த நிலையில் 177 ரன்கள் எடுத்து ஆஸ்திரேலியா சுருண்டு உள்ளது. இதையடுத்து தற்போது இந்தியா முதல் இன்னிங்சில் 400 ரன்கள் எடுத்து 223 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

நாக்பூர் டெஸ்ட்

நாக்பூர் டெஸ்ட்

இன்று நடந்த நாக்பூர் டெஸ்டில் அக்சர் பட்டேல் செஞ்சுரி அடிக்க வேண்டும் என்பதற்காக சிராஜ் மிகவும் கவனமாக ஆடினார். சிராஜ் இதற்கு முன்பே மைதானத்தில் பல முறை தனது ஸ்போர்ட்ஸ்மேன்ஷிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். இந்திய வீரர்கள் செஞ்சுரி அடிக்கும் போது அதை முதல் ஆளாக கொண்டாடும் நபர் சிராஜ்தான். பல முறை மைதானத்தில் சக வீரர்களின் வெற்றியை சிராஜ் சிறப்பாக கொண்டாடி கவனம் ஈர்த்து உள்ளார். இன்றும் கூட மைதானத்தில் அக்சர் பட்டேலுக்காக சிராஜ் ஆடிய விதம் பெரிய அளவில் கவனிக்கப்பட்டது.

 சிராஜ் பேட்டிங்

சிராஜ் பேட்டிங்

இன்றும் அக்சர் பட்டேல் - ஷமி ஆடிக்கொண்டு இருந்த போது.. விக்கெட் விழுவதை பற்றி கவலைப்படாமல் ஷமி சிக்ஸர், பவுண்டரியாக அடித்தார். 47 பந்துகள் பிடித்த ஷமி 37 ரன்கள் எடுத்தார். 3 சிக்ஸ், 2 பவுண்டரி அடித்தார். தொடர்ந்து அதிரடியாக ஆடி வந்த அவர் ஷமி மர்பி ஓவரில் கேரியிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அதன்பின் இறங்கிய சிராஜ் மிகவும் பொறுமையாக ஆடினார். ஏனென்றால் எதிர் பக்கத்தில் அக்சர் பட்டேல் 70 ரன்கள் எடுத்து ஆடிக்கொண்டு இருந்தார். அவர் செஞ்சுரி அடிக்க வேண்டும் என்பதற்காக சிராஜ் நிதானமாக ஆடினார்.

 கவனம்

கவனம்

விக்கெட் இழக்காமல் சிராஜ் நிதானமாக ஆடினார். பொதுவாக சிராஜ் கடைசி நேரத்தில் இறங்கி சுற்றக்கூடிய நபர். அப்படியே இறங்கி பேட்டை சுற்றி சிக்ஸ், பவுண்டரி என்று அடிக்க கூடியவர். கடந்த பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடரில் கூட சிராஜ் இப்படித்தான் பேட்டை சுற்றினார். ஆனால் இன்று சிராஜ் அப்படி ஆடவில்லை. விக்கெட்டை இழக்க கூடாது என்பதற்காக மிகவும் நிதானமாக ஆடினார். பெரிதாக ரன் அடிக்க வேண்டும் என்று நீக்காமல் முடிந்த அளவு பந்தை டிபன்ட் செய்தார்.

 சிங்கிள்

சிங்கிள்

அதோடு ஓவரின் கடைசி பந்துகளில் சிங்கிள் எடுக்காமல் முடிந்த அளவு அக்சர் பட்டேல் ஸ்டிரைக்கை பெற வேண்டும் என்று விட்டுக்கொடுத்தார். கடைசியில் இறங்கி அடித்து ஆடி கொஞ்சம் ரன் எடுக்க வேண்டும் என்று நினைக்காமல் அக்சர் பட்டேல் செஞ்சுரி அடிக்க வேண்டும் என்று கவனமாக ஆடினார். இதனால் 19 பந்துகள் பிடித்து 1 ரன் மட்டுமே சிராஜ் எடுத்தார். கடைசியிலும் கூட சிராஜ் அவுட் ஆகவில்லை. அக்சர்தான் கும்மின்ஸ் போட்ட ஸ்லோ பந்தில் அவுட் ஆனார். சிராஜ் இன்று தன்னுடைய பேட்டிங் பற்றி கவலைப்படாமல் சக வீரருக்காக ஆடிய விதம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+