திருமண நாளில்.. இணை பிரியா சகோதரிகள் எடுத்த விபரீத முடிவு.. ஒட்டுமொத்த ஊரும் ஆடிப்போச்சு!
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் ஒரே நாளில் சகோதரிகள் இருவருக்குத் திருமணம் நடைபெற இருந்தது. இருப்பினும், திருமணத்திற்குச் சில மணி நேரத்திற்கு முன்பு இரு சகோதரிகளும் தற்கொலை செய்து கொண்டனர். நாடு முழுக்க இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இதில் சில பகீர் தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்தக் காலத்து இளம் தலைமுறையினர் துணிச்சலாகவே இருக்கிறார்கள். எந்தவொரு சிக்கலாக இருந்தாலும் அதைத் தைரியமாக எதிர்கொள்கிறார்கள். ஆனால், சில நேரங்களில் அவர்கள் மோசமான முடிவுகளை எடுத்துவிடுகிறார்கள். அப்படியொரு மோசமான சம்பவம் தான் ராஜஸ்தான் மாநிலத்தில் நடந்துள்ளது.

விபரீத முடிவு
ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் சகோதரிகளுக்கு ஒரே மேடையில் திருமணம் நடைபெற இருந்தது. அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. இருப்பினும், இரட்டைத் திருமணம் நடைபெறவிருந்த சில மணி நேரங்களுக்கு முன்பு, அந்த வீடே சோகத்தில் மூழ்கியது. திருமணத்திற்குச் சில மணி நேரங்களே இருந்தபோது, இரண்டு சகோதரிகள் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது.
தற்கொலை செய்து கொண்டவர்கள் தீப் சிங் என்பவரின் மகள்களான ஷோபா (25) மற்றும் விமலா (23) என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இருவரும் அங்குள்ள ஒரு தனியார்ப் பள்ளி ஆசிரியர்களாக வேலை செய்து வந்தனர். இருவருக்கும் நேற்று சனிக்கிழமை திருமணம் நடைபெற இருந்தது. வெள்ளிக்கிழமை இரவு வரை திருமணக் கொண்டாட்டங்கள் கோலாகலமாக நடந்தது.
உயிரிழப்பு
அப்போது தான் அவர்கள் மயங்கிக் கிடப்பது தெரிய வந்துள்ளது. இதையடுத்து உடனடியாக உறவினர்கள் இரு சகோதரிகளையும் அருகே உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். இருப்பினும், மருத்துவமனைக்கு வரும் முன்பே அவர்கள் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து உடலை வாங்கி சென்ற பெற்றோர் இறுதிச் சடங்கிற்கான ஏற்பாடுகளைச் செய்ய ஆரம்பித்தனர்.
போலீசார் விசாரணை
இது தற்கொலை என்பதால் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், இது தொடர்பாக விசாரணையை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில் சகோதரிகள் விஷம் அருந்தி உயிரிழந்திருக்கலாம் என என்றனர். அதேநேரம் உயிரிழப்பிற்கான காரணத்தை இப்போது சொல்ல முடியாது என்று என்றும் இது தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என்றும் போலீசார் தெரிவித்தனர்.
சந்தேகம்
தகன ஏற்பாடுகள் நடக்கும்போதே போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதிகாரிகள் சகோதரிகளின் உடல்களைக் கைப்பற்றி உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்தனர். பிரேதப் பரிசோதனை முடிந்த பிறகு உடல் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.. அதேநேரம் இந்தச் சம்பவத்தில் தங்களுக்குச் சந்தேகம் இருப்பதாகத் தற்கொலை செய்து கொண்ட பெண்களின் உறவினர்கள் குற்றஞ்சாட்டுகிறார்கள். தந்தை வழிக் குடும்பத்தினரைச் சாடுகிறார்கள்.
சகோதரிகள் இருவருக்கும் முன்பு சில வரன்கள் பார்த்தும், செட் ஆகவில்லையாம். இதனால் சீக்கிரம் கல்யாணம் செய்யும்படி தீப் சிங்கின் இளைய சகோதரிகள் அழுத்தம் கொடுத்தாக அவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரித்து வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இயற்கைக்கு மாறான மரணம் என்ற பிரிவில் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணையை ஆரம்பித்துள்ளனர்.
தற்கொலை என்பது எந்தவொரு பிரச்சினைக்கும் தீர்வு இல்லை.. தற்கொலை செய்து கொள்ளும் எண்ணம் தோன்றினால் உடனடியாகச் சினேகா தற்கொலை தடுப்பு உதவி எண்: 044 -2464000 (24 hours), மாநில தற்கொலை தடுப்பு உதவி எண்: 104 (24 hours), ஐகால் (iCall Pychosocial) உதவி எண்e - 022-25521111 ( Mon - Sat, 8am - 10pm) எண்களுக்குத் தொடர்பு கொள்ளவும்.
-
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா? -
"₹370 பிரியாணி வாங்கி கொடுத்தால் உடலுறவு?" பெரிதாக வெடிக்கும் சர்ச்சை.. களத்தில் இறங்கிய போலீஸ் -
அமெரிக்க தாக்குதலில் இந்திய மாலுமிகள் மாயம்.. துணை தூதரை அழைத்து கண்டித்த மத்திய அரசு! -
வேம்புலி செய்த வேலை.. தவெக நிர்வாகிகளுக்கு எப்போது ஒழுக்கத்தை சொல்லித் தருவார் முதல்வர் விஜய்? -
இந்தியரின் நிறுவனத்தை பறிக்கும் பிரான்ஸ்? நிறைவேறிய சட்ட மசோதா.. அதிர்ச்சி -
இனி "இவங்க" யாரும் பெட்ரோல் பங்கில் டீசலை வாங்க முடியாது.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு -
அரசு பேருந்து ஓட்டுநரை பட்டா கத்தியால் வெட்டிவிட்டு எஸ்கேப் ஆன தவெக நிர்வாகி கைது -
"அலறிய அபாய சைரன்.." நடுக்கடலில் தத்தளிக்கும் இந்தியர்கள்.. கப்பல் மீது பாய்ந்த ஏவுகணை.. பதற்றம் -
பெட்ரோல் விலை 100க்கு கீழ் வருமா? மத்திய அரசின் வரி குறைப்பால் இந்தியாவில் என்ன நடக்க போகிறது? -
இந்தியா பக்கம் வீசும் காத்து.. சீனாவுக்கு செக் வைக்க சரியான ஆள் கிடைச்சாச்சு! உற்று நோக்கும் உலகம் -
"அப்பா நான் நல்லா இருக்கேன்!" மெசேஜ் அனுப்பி கொஞ்ச நேரம் கூட ஆகல! அமெரிக்கா தாக்குதலில் இந்தியர் பலி -
இந்தியாவை கபளீகரம் செய்த சரிவு.. நிலைமை ரொம்ப மோசம்.. இது தொடர்ந்தால் டேஞ்சர் தான்!












Click it and Unblock the Notifications