கறுப்பு பணம் மீட்புக்கான சிறப்பு புலனாய்வு குழுவின் முதல் கூட்டம் நாளை கூடுகிறது!
டெல்லி: கறுப்புப் பணத்தை மீட்பதற்கு மத்திய அரசு அமைத்த சிறப்புப் புலனாய்வுக் குழுவின் முதல் கூட்டம் டெல்லியில் நாளை கூடுகிறது.
வெளிநாட்டு வங்கிகளில் இந்தியர்கள் பதுக்கி வைத்துள்ள கறுப்பு பணத்தை மீட்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரி மூத்த வழக்கறிஞர் ராம்ஜெத்மலானி, உச்சநீதிமன்றத்தில் பொதுநலன் மனு தாக்கல் செய்தார். அம்மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், கறுப்பு பண மீட்பு தொடர்பான விசாரணையை கண்காணிக்க சிறப்பு புலனாய்வு குழுவை 3 வாரங்களுக்குள் அமைக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு உத்தரவிட்டது.

ஆனால், முந்தைய மன்மோகன்சிங் அரசு 3 வாரங்களுக்குள் அக்குழுவை அமைக்கவில்லை. இதையடுத்து, சிறப்பு புலனாய்வு குழு அமைப்பதற்கான கால அவகாசத்தை மேலும் ஒரு வார காலத்துக்கு உச்சநீதிமன்றம் நீட்டித்தது.
அந்த அவகாசமும் முடிவடையும் நிலையில் நீதிபதி எம்.பி.ஷா தலைமையில் சிறப்பு புலனாய்வு குழுவை நரேந்திர மோடி தலைமையிலான புதிய மத்திய அரசு அமைத்தது.
இதைத் தொடர்ந்து கறுப்பு பணத்தை மீட்க அமைக்கப்பட்டுள்ள சிறப்பு புலனாய்வு குழுவின் முதல் உயர்நிலைக் கூட்டம் நாளை கூடுகிறது. இதில் கொள்கை விவகாரங்கள் மற்றும் நடைபெற்று வரும் விசாரணை உள்ளிட்டவைகள் குறித்து விவாதிக்கப்பட இருக்கிறது.
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications