இத்தனை இழுபறியிலும், குஜராத்தில் மீண்டும் பாஜக பெரும்பான்மை பெற முடிந்தது எப்படி?
Recommended Video

டெல்லி: குஜராத்தில் மீண்டும் ஆட்சியை, பாஜக தக்க வைத்துக்கொள்ள 6 முக்கிய காரணங்கள் உள்ளதாக கூறுகிறார்கள் அரசியல் நோக்கர்கள்.
அதுகுறித்த ஒரு பார்வை இதோ:
மோடி மீதான காங்கிரஸ் கட்சி சீனியர் தலைவர் மணி சங்கர் ஐயரின் ஜாதி ரீதியிலான தாக்குதல் அந்த கட்சிக்கே பதில் தாக்குதல் நடத்திவிட்டது. இதை தப்பாமல் அரசியல் லாபத்திற்கு பயன்படுத்திக்கொண்டார் மோடி.
மண்ணின் மகன் அவமானப்படுத்தப்பட்டுவிட்டார் என்று மோடி முழங்கியது, குஜராத் மக்களின் நெஞ்சில் போர்ப்பறையாக எதிரொலிக்க காரணமாகிவிட்டது.

ஜிஎஸ்டி பல்டி
குஜராத் தேர்தலுக்கு முன்பாக, மத்திய அரசு ஜிஎஸ்டி வரி விதிப்பில் மாற்றங்களை கொண்டுவந்தது. குஜராத் வணிகர்களுக்கு எதெல்லாம் பாதிப்பாக இருந்ததோ, அதெல்லாம் பிறகு சாதகமாக மாற இந்த வரி மாற்றம் உதவியது. ஜிஎஸ்டியில் செய்யப்பட்ட அதிரடி மாற்றங்கள் மக்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.

வட்டியில்லா கடன்
தேர்தல் நெருங்கிய நேரத்தில், விவசாயிகளுக்கு, வட்டியில்லா, ரூ.3 லட்சம் கடனுதவி திட்டத்தை அறிவித்தார் குஜராத் முதல்வர் விஜய் ருபானி. இதனால் 25 லட்சம் விவசாயிகள் பலன் அடைவார்கள். விவசாய சமுதாயத்தின் பெரும் பகுதியை பாஜக நோக்கி திரும்ப வைத்துள்ளது இந்த அறிவிப்பு.

பாகிஸ்தான் தொடர்பு
முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் மற்றும் மணஇ சங்கர் ஐயர் ஆகியோர் பாகிஸ்தான் அதிகாரிகளை சந்தித்து, சசி திட்டம் தீட்டியதாக பிரச்சாரத்தில் குற்றம்சாட்டினார் பிரதமர் மோடி. இதுவும் குஜராத்தில் பலன் கொடுத்துள்ளது.

ஹர்திக் பட்டேல் வீடியோக்கள்
தேர்தலுக்கு முன்பாக ஹர்திக் பட்டேல் தொடர்பான பல பாலியல் புகார் வீடியோ காட்சிகள் வெளியானபடியே இருந்தன. பாஜகவுக்கு பெரும் சவாலாக இருப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஹர்திக் பட்டேலை இது பலவீனப்படுத்தியது.

கூடா நட்பு கேடாய் முடிந்தது
காஷ்மீர் பிரிவினைவாதி, சல்மான் நிஜாமி ராகுல் காந்தியுடன் பிரச்சாரத்தில் ஈடுபட்ட விவகாரத்தை மோடி சர்ச்சைக்குள்ளாக்கினார். அப்சல் குரு போன்ற தீவிரவாதிகளுக்கு ஆதரவாக நிஜாமி வெளியிட்ட டிவிட்டுகளை மோடி நினைவுபடுத்தி பேசினார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications