பெரும் சோகம்! சிக்கிம் மேகவெடிப்பு.. 6 ராணுவ வீரர்கள் உள்பட 19 பேர் பலி..103 பேரை தேடும் பணி தீவிரம்
காங்டாக்: சிக்கிம் மாநிலத்தின் தீஸ்தா நதியில் ஏற்பட்ட கடும் வெள்ளப் பெருக்கு காரணமாக 14 பேர் உயிரிழந்ததாகவும், 22 ராணுவ வீரர்கள் உள்பட 102 பேரை காணவில்லை எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான சிக்கிமில் நேற்று முன் தினம் மேகவெடிப்பு ஏற்பட்டது. நேபாள எல்லை அருகே உள்ள லோனக் ஏரி பகுதியில் ஏற்பட்ட இந்த மேக வெடிப்பு காரணமாக டீஸ்டா நதியில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால், சங்தங் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதன் காரணமாக லக்சன் பள்ளத்தாக்கு பகுதியில் பல இடங்களில் சாலைகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன.

இதனால், 23 ராணுவ வீரர்கள் உள்பட 102 பேர் காணாமல் போகினர். சிக்கிம் மாநில தலைநகரான காங்டாக், வெள்ளத்தால் மாநிலத்தின் பிற பகுதிகளில் இருந்து துண்டிக்கப்பட்டுள்ளது. சிக்கிம் மாநிலத்தை நாட்டின் பிற பகுதிகளுடன் இணைக்கும் தேசிய நெடுஞ்சாலையும் பல இடங்களில் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டுள்ளது. வெள்ளத்தில் சிக்கி மாயமானவர்களை தேடும் பணி முழு வீச்சில் நடந்து வருகிறது.
இதனிடையே, சிக்கிம் மாநிலத்தில் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டதில் பலியான 19 பேரில் 6 பேர் ராணுவ வீரர்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது. மேலும் 16 ராணுவ வீரர்கள் உள்பட 100 க்கும் மேற்பட்டவர்களை இன்னும் காணவில்லை என்றும் அவர்களை தேடும் பணி முழு வீச்சில் நடைபெறும் சிக்கிம் மாநில அரசு வட்டாரங்கள் கூறுகின்றன. சுமார் 3 ஆயிரம் சுற்றுலாப்பயணிகள் சிக்கி தவிப்பதாகவும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து 2,500 பேர் மீட்கப்பட்டுள்ளதோடு, 6 ஆயிரம் பேர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு இருப்பதாகவும் சிக்கிம் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுற்றுலாப்பயணிகள் தற்போதைக்கு சிக்கிம் மாநிலத்திற்கு வர வேண்டாம் எனவும் அந்த மாநில அரசு கோரிக்கை விடுத்துள்ளது. திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் நீர் மின் நிலையமும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டு இருப்பதால் மீண்டும் மின் உற்பத்தியை தொடங்க அனைத்து தேவையான நடவடிக்கைகளையும் மாநில அரசுக்கு சொந்தமான ஹைட்ரோபவர் பவர் கார்ப்பரேஷன் முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications