அடுத்தடுத்து தமிழர்கள் கைது.. செம்மரக்கட்டைகள் பறிமுதல்... மீண்டும் பதற்றத்தில் தமிழக எல்லை
ஆந்திர மாநிலத்தில் செம்மரம் வெட்டிக் கடத்தியதாக தமிழர்கள் 6 பேரை அம்மாநில போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.
கடப்பா: ஆந்திர மாநிலத்தில் செம்மரம் வெட்டிக் கடத்தியதாக தமிழர்கள் 6 பேரை அம்மாநில போலீசார் கைது செய்துள்ளனர். திருப்பதி மலைப் பகுதியில், தமிழர்களிடமிருந்து ரூ.30 லட்சம் மதிப்புள்ள செம்மரக்கட்டைகளை ஆந்திர போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். இந்தச் சம்பவங்களால் மீண்டும் தமிழக எல்லை கிராமங்கள் பதற்றத்தில் மூழ்கியுள்ளன.
ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டம் காஜிப்பேட்டை வனப்பகுதியில் செம்மரக்கடத்தல் தடுப்பு பிரிவு அதிரடிப்படை இன்ஸ்பெக்டர் ஆலிபாஷா, ராம்மோகன்ரெட்டி, வனத்துறை நிலைய அலுவலர் குருவய்யா தலைமையில் ரோந்து சென்றனர்.

அப்போது வனப்பகுதியில் உத்திரப்பிரதேச பதிவு எண் கொண்ட கார் வந்தது. அதில் வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் தாலுக்கா மல்லபட்டு கிராமத்தை சேர்ந்த பெருமாள், நீலிவாசம் கிராமத்தை சேர்ந்த துக்காராம், நல்லிப்பட்டு அய்யனார், தருமபுரி மாவட்டம் அரூர் தாலுக்கா வீரப்பநாயக்கபட்டு கிராமத்தைச் சேர்ந்த ராமஜெயம், கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையை சேர்ந்த மாதேஷ், திருவண்ணாமலை மாவட்டம் கிழ்பெருனாமத்தூரைச் சேர்ந்த சகாதேவ் ஆகிய 6 பேர் இருந்துள்ளனர்.
Recommended Video

அவர்களிடம் நடத்திய விசாரணையில் முறையான தகவல்கள் கிடைக்கவில்லை என்பதால் அவர்களை போலீசார் கைது செய்தனர்.
மேலும், இதே போல் ஸ்ரீவாரி மெட்டு மலைப்பாதையில் ரோந்து சென்று கொண்டிருந்த எஸ்.ஐ. வாசு தலைமையிலான போலீசார், திருமலைக்கு பாத யாத்திரை செல்லக் கூடிய மலைப்பாதையை ஒட்டியுள்ள வனப்பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ரூ 30 லட்சம் மதிப்புள்ள 12 செம்மரம் இருப்பதை பார்த்து அவற்றை பறிமுதல் செய்தனர்.
வனப்பகுதியில் தப்பி சென்றவர்களை தேடும் பணி நடைபெற்று வருகிறது. ஆந்திராவில் மீண்டும் செம்மரக்கட்டைகள் கடத்தல் மற்றும் கைது விவகாரம் அதிகரித்துள்ளதால், ஆந்திர எல்லையோர தமிழக கிராமங்களில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications