திருமலையில் உலா வந்த 6வது சிறுத்தை சிக்கியது.. சிறுமியை கொன்ற சிறுத்தை பிடிபட்டதா?
திருப்பதி: ஏழுமலையான் கோவிலில் பாதையாத்திரையாக பக்தர்கள் செல்லும் நடைபாதையில் சுற்றி வந்த மேலும் ஒரு சிறுத்தை வனத்துறை வைத்த கூண்டில் சிக்கியது. இதுவரை 6 சிறுத்தைகள் கூண்டு வைத்து பிடிக்கப்பட்டு திருப்பதியில் உள்ள உயிரியல் பூங்காவில் விடப்பட்டுள்ளது.
திருப்பதி திருமலையில் அருள்பாலிக்கும் ஏழுமலையானை தரிசனம் செய்ய தினசரியும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். பேருந்து மூலம் மட்டுமல்லாது அலிபிரி, ஸ்ரீவாரி மெட்டு பாதை வழியாக பாதையாத்திரையாக சென்றும் ஏழுமலையானை தரிசனம் செய்கின்றனர். பாதை யாத்திரை செல்லும் பகுதி வனப்பகுதி என்பதால் அவ்வப்போது வன விலங்களும் வந்து செல்லும். சிறுத்தை, கரடி, காட்டுப்பன்றி போன்ற விலங்குகளின் நடமாட்டமும் இருக்கும்.

கடந்த மாதம் ஆந்திராவின் நெல்லூர் மாவட்டம் பாத்திரெட்டி பாளையம் கிராமத்தை சேர்ந்த சிறுமியை சிறுத்தை தாக்கி கொன்றது. லட்சுமி நரசிம்மர் கோயிலுக்கு அருகில் சிறுமியின் உடல் காயங்களுடன் கண்டெடுக்கப்பட்டது. சிறுத்தை தாக்கி சிறுமி பலியான விவகாரம் பக்தர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அலிபிரி முதல் காலிகோபுரம் வரை உள்ள பகுதியில் மூன்று இடங்களிலும், காலிகோபுரத்தில் இருந்து ஏழாவது மைல் வரை உள்ள பகுதியில் ஒரு இடத்திலும் ,திருப்பதியில் இருந்து திருமலைக்கு வாகனங்களில் செல்ல பயன்படுத்தும் சாலையில் 38 வது வளைவு அருகே ஒரு இடத்திலும் சிறுத்தை நடமாட்டத்தை தேவஸ்தான விஜிலென்ஸ் துறையினர் அடையாளம் கண்டனர்.
திருமலை திருப்பதியில் முதலாவது பாதையில் இருக்கும் யானை வளைவு அருகே சிறுத்தை புலியும் , ஸ்பெஷல் டைப் காட்டேஜ் பகுதியில் கரடி நடமாட்டமும் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதுத்தவிர முள்ளம் பன்றி , காட்டுப்பன்றிகள் , புனுகு பூனைகள் ஆகியவை நடமாட்டம் இரவில் இருப்பது தானியங்கி முறையில் படம் பிடிக்கும் ட்ராப் கேமராக்களில் பதிவாகின. இதனால் சிறுத்தைகளை பிடிக்க 6 கூண்டுகள் வைக்கப்பட்டன. அதன்படி திருப்பதி கோயில் மலைப்பாதையில் சுற்றித் திரிந்த சிறுத்தை வனத்துறையினர் கூண்டில் சிக்கியது.
கடந்த 2 வாரங்களில் அடுத்தடுத்து 5 சிறுத்தைகள் சிக்கியது. கூண்டில் சிக்கிய சிறுத்தைகள் வெங்கடேஸ்வரா வன உயிரியல் பூங்காவில் வைத்து பராமரிக்கப்படுகின்றன. வன உயிரியல் பூங்காவில் இருந்த 5 சிறுத்தைகளில் சிறுமியை கொன்ற சிறுத்தையை அடையாளம் காண டி.என்.ஏ. பரிசோதனை செய்யப்பட்டது. சோதனை முடிவில் 2 சிறுத்தைகள் சிறுமியை கொல்லவில்லை என தெரிய வந்தது.
இதையடுத்து 2 சிறுத்தைகளை வன சரணாலயங்களில் விடப்பட்டன. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக திருப்பதி மலை பாதையில் சிறுத்தை ஒன்று சுற்றித் திரிவதை வாகனங்களில் சென்ற பக்தர்கள் பார்த்தனர். இது குறித்து தேவஸ்தான அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். சிறுத்தையை பிடிக்க பல்வேறு இடங்களில் இரும்பு கூண்டுகள் வைக்கப்பட்டன.
இன்று அதிகாலை அலிபிரி நடைபாதையில் உள்ள லட்சுமி நரசிம்ம சாமி கோவில் அருகே சிறுத்தை ஒன்று கூண்டில் சிக்கியது. கூண்டில் சிக்கிய சிறுத்தையை வனத்துறையினர் வெங்கடேஸ்வரா வன உயிரியல் பூங்காவுக்கு கொண்டு சென்றனர். மேலும் பக்தர்கள் நடைபாதையில் பாதுகாப்பாக செல்ல தேவஸ்தான அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.
திருமலையில் பிரம்மோற்சவ விழா நடைபெற்று வரும் நிலையில் பாதயாத்திரையாக செல்லும் பக்தர்கள் கையில் கம்புகளுடன் கோவிந்தா முழக்கம் எழுப்பியபடி பக்தர்கள் நடந்து சென்றனர். பக்தர்களின் பாதுகாப்புக்காக ஸ்ரீவாரி, அலிபிரி மெட்டு ஆகிய இரண்டு நடைபாதை வழிகளிலும் 500 சிசிடிவி கேமராக்கள் பொருத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தேவைப்பட்டால் ட்ரோன் கேமராக்களும் வாங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். வனவிலங்கு கண்காணிப்பாளர்கள் மற்றும் மருத்துவர்களுடன் வனவிலங்கு புறக்காவல் நிலையங்கள் அமைக்கப்பட்டு அவை 24 மணி நேரமும் செயல்படும் என தேவஸ்தான அதிகாரிகள் கூறியுள்ளனர். சுற்றுவட்டார பகுதிகளில் 30 மீட்டர் தூரம் வரை வன விலங்குகள் தெரியும் வகையில் ஃபோகஸ் லைட்டுகள் அமைக்கப்பட்டு வருகிறது. மலையேற்ற பாதைகளுக்கு வேலி அமைக்கும் யோசனையையும் திருமலை திருப்பதி தேவஸ்தானம் முன் வைத்துள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications