3 நாட்களில் 2வது முறையாக அஸ்ஸாமில் நிலநடுக்கம்: மக்கள் பீதி

Subscribe to Oneindia Tamil

டிஸ்புர்: அஸ்ஸாமில் நள்ளிரவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் இது 4.7 ஆக பதிவாகியிருந்தது.

நேபாளத்தில் கடந்த சனிக்கிழமை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதையடுத்து இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் நிலநடுக்கம் ஏற்பட்டது. நேபாளத்தில் நிலநடுக்கத்தால் பலியானவர்களின் எண்ணிக்கை 6 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

Slight intensity quake felt in Assam post midnight

நேற்று அங்கு மூன்று முறை நில அதிர்வுகள் ஏற்பட்டன. இந்நிலையில் அஸ்ஸாமில் இரவு 12.51 மணி அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. ஜோர்ஹத் பகுதியை மையமாக கொண்டு ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.7 ஆக பதிவாகியிருந்தது.

இந்த நிலநடுக்கத்தால் உயிர் சேதமோ, பொருட் சேதமோ ஏற்பட்டதாக இதுவரை தகவல் எதுவும் இல்லை.

முன்னதாக கடந்த புதன்கிழமை காலை அஸ்ஸாமில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+