மிசோரம்: தொங்கு சட்டசபை? புதைகுழியில் இருந்து எழும் காங்கிரஸ்? தலைகீழா முட்டி மோதியும் மலராத பாஜக?
ஐய்ஸ்வால்: மிசோரம் மாநில சட்டசபை தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காது; தொங்கு சட்டசபைதான் உருவாகும் என
Small Box India-ன் இறுதி கருத்து கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.
40 தொகுதிகளைக் கொண்ட மிசோரம் மாநில சட்டசபைக்கு நவம்பர் 7-ந் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இத்தேர்தலில் பதிவாகும் வாக்குகள் டிசம்பர் 3-ந் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

மிசோரம் மாநிலத்தப் பொறுத்தவரையில் ஆளும் மிசோ தேசிய முன்னணி, காங்கிரஸ், ஜோரம் மக்கள் இயக்கம் ஆகியவை பிரதான போட்டியாளர்கள். இம்மாநிலத்தில் பாஜகவும் களத்தில் இருக்கிறது. 1987-ம் ஆண்டு மிசோரம் மாநில அந்தஸ்து பெற்றது முதல் நடைபெற்ற சட்டசபை தேர்தல்களில் மிசோ தேசிய முன்னணி அல்லது காங்கிரஸ் ஆட்சிகளே மாறி மாறி அமைந்தன. 2018 தேர்தலில் மிசோ தேசிய முன்னணி ஆட்சி அமைத்தாலும் மத்தியில் ஆளும் கட்சி என்பதாலும் பாஜகவும் தம்மை கூட்டணி அரசில் இருப்பதாக காட்டிக் கொண்டது.

மிசோரம் சட்டசபை தேர்தல் இன்னும் சில வாரங்கள் நடைபெறும் நிலையில்
Small Box India தமது இறுதி கட்ட கருத்து கணிப்பை வெளியிட்டுள்ளது. இந்த கருத்து கணிப்பில் பெரும்பான்மைக்கான 21 இடங்களை எந்த கட்சியும் பெறாது; தொங்கு சட்டசபைதான் அமையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இம்மாநிலத்தில் முதல் முறையாக தொங்கு சட்டசபை அமையக் கூடும் என்கிறது இக்கருத்து கணிப்பு.
Small Box India கருத்து கணிப்பு முடிவுகள்:
ஆளும் மிசோ தேசிய முன்னணி 12-14 இடங்கள்
காங்கிரஸ் 11-13 இடங்கள்
ஜோரம் மக்கள் இயக்கம் 9-11 இடங்கள்
பாஜக 0-1 இடம்
இதர கட்சிகள் 0 - 2 இடங்கள்
இந்த கருத்து கணிப்புகளின் முடிவின் அடிப்படையில் காங்கிரஸ்- ஜோரம் மக்கள் இயக்கம் இரண்டும் இணைந்து ஆட்சி அமைக்கக் கூடிய சாத்தியம் உள்ளது.
2018-ம் ஆண்டு தேர்தலில் மிசோ தேசிய முன்னணி 26 இடங்களிலும் காங்கிரஸ் 5 இடங்களிலும் ஜோரம் மக்கள் இயக்கம் 8 இடங்களிலும் வென்றன. இம்முறை காங்கிரஸ் உயிர்த்தெழுந்து இழந்த அதிகாரத்தை கூட்டணி ஆட்சி மூலம் கைப்பறறும் வாய்ப்புகள் இருப்பதாக கருத்து கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.
-
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications