இத்தனை போட்டோகிராபர்கள் இருக்காங்க.. "இவரும்" வந்துட்டாரு பாருங்க! கிரிக்கெட் போட்டியில் சுவாரஸ்யம்
கவுகாத்தி: இந்தியா- தென்னாப்பிரிக்கா இடையேயான டி 20 போட்டியின் போது மைதானத்தில் ஒரு பாம்பு நுழைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்தியா- தென்னாப்பிரிக்கா இடையேயான 2ஆவது டி 20 போட்டி அஸ்ஸாம் மாநிலம் கவுகாத்தியில் உள்ள பார்சபாரா மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் இந்திய அணி முதலில் களம் இறங்கி பேட்டிங் செய்தது.
போட்டி விறுவிறுப்பாக நடந்து கொண்டிருந்த போது 7ஆவது ஓவரின் போது மைதானத்திற்குள் நெளிந்தபடியே ஒன்று வந்து கொண்டிருந்தது. இதை தென்னாப்பிரிக்கா வீரர்கள் கவனித்தனர்.

போய் பார்த்தால் பாம்பு
போய் பார்த்தால் பாம்பு... உடனே அதிர்ச்சியடைந்து கிரிக்கெட் அம்பயரிடம் கூறினர். இதையடுத்து பாம்பு புகுந்த அந்த இடத்திலிருந்து வீரர்கள் விலகி வேறு இடத்தில் போய் நின்றனர். இதனால் போட்டி சில நேரம் தடைபட்டது. உடனடியாக விரைந்து வந்த மைதான பராமரிப்பாளர்கள், அந்த பாம்பை பிடித்து சென்றனர்.

ஆட்டம் மீண்டும் தொடக்கம்
இதையடுத்து ஆட்டம் மீண்டும் தொடங்கியது. இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலானது. பாம்பு என்ன விளையாட்டு போட்டியை படம் எடுக்க வந்ததா என நெட்டிசன்கள் கிண்டல் செய்து வருகிறார்கள். இதே போல் கடந்த 2019ஆம் ஆண்டு ராஞ்சி தொடருக்கான போட்டியின் போதும் பாம்பு நுழைந்தது.

விதர்பா அணிகள்
விஜயவாடாவில் ஆந்திரபிரதேசம்- விதர்பா அணிகள் மோதிய போது போட்டி தொடங்குவதற்கு முன்பே பாம்பு இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த பாம்பு அப்புறப்படுத்தப்பட்டது. இதன் பிறகு போட்டியானது தொடங்கியது. பாம்பை கண்டால் படையே நடுங்கும் என்பார்கள். அப்படியிருக்கும் போது கிரிக்கெட் வீரர்கள் மட்டும் என்ன விதிவிலக்கா?

பாம்பு நுழைந்தது
பொதுவாக மழை, மோசமான வானிலை, யாருக்கேனும் அடிபட்டுவிட்டால் மட்டுமே கிரிக்கெட் போட்டிகள் சற்று நேரம் தாமதமாகும், இல்லாவிட்டால் நிறுத்தி வைக்கப்படும். ஆனால் பாம்பு நுழைந்ததால் கிரிக்கெட் போட்டிகள் சற்று நேரம் நிறுத்தி வைக்கப்படுவது அச்ச உணர்வையும் சிரிப்பலையையும் ஏற்படுத்தியுள்ளது.
-
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
தங்கம் விளையும் 3 இந்திய நதிகள்.. மணலை சலித்து தங்கத்தை அள்ளும் பொதுமக்கள்! சர்ப்ரைஸ் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications