குஜராத் இளம்பெண் வேவு விவகாரத்தில் விசாரணை கமிஷன் இல்லை- சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு!
டெல்லி: குஜராத்தில் இளம்பெண் ஒருவர் வேவு பார்க்கப்பட்ட விவகாரத்தில் விசாரணை கமிஷன் அமைக்கப்போவதில்லை என்று உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
குஜராத் மாநிலத்தில் இளம்பெண் ஒருவர் அம்மாநில முதல்வர் நரேந்திர மோடியின் வலது கரமான அமித் ஷாவின் உத்தரவின் பேரில் போலீசார் வேவு பார்க்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
மேலும் போலீசாருக்கு அமித்ஷா உத்தரவிட்ட டேப் உரையாடலும் வெளியாகின. இந்த விவகாரத்தில் மத்திய அரசு ஒரு விசாரணைக் கமிஷனை அமைக்கவும் முடிவு செய்திருந்தது.
ஆனால் கூட்டணிக் கட்சிகளின் கடும் எதிர்ப்பினால் இம்முடிவை மத்திய அரசு கைவிட்டது. இந்நிலையில் வேவு பார்க்கப்பட்ட பெண்ணின் தந்தை உச்சநீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார்.
அதில், மத்திய, மாநில அரசுகள் இதுதொடர்பான விசாரணையில் ஈடுபடுவது திருமணம் முடிந்த மகளின் தனிப்பட்ட வாழ்க்கையை கெடுத்துவிடும். எனவே அதுபோன்ற எந்த விசாரணையையும் நடத்த வேண்டாம் என்று அரசுக்கு உத்தரவிட கோரியிருந்தார்.
இம்மனு இன்று விசாரணைக்கு வந்த போது, விசாரணைக் கமிஷன் அமைக்கப் போவதில்லை என்று மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதை உச்சநீதிமன்றம் ஏற்றுக் கொண்டது.
மேலும் அப்படி ஒரு விசாரணக் கமிஷன் அமைக்கப்பட்டால் அது தொடர்பாக குஜராத் உயர்நீதிமன்றத்தையே நாடலாம் என்றும் அப்பெண்ணின் தந்தைக்கும் உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications