நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் தவறுகள் நடந்திருக்கலாம்: சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு ஒப்புதல்
Subscribe to Oneindia Tamil
டெல்லி: நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் தவறு நடந்திருக்க வாய்ப்பு உள்ளது என்று உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு சார்பில் ஆஜரான அட்டர்னி ஜெனரல் வாஹன்வதி தெரிவித்துள்ளார்.
57 நிலக்கரி சுரங்கங்கள் முறைகேடாக ஒதுக்கப்பட்டதில் மத்திய அரசுக்கு 1.86 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டது தொடர்பாக 16 வழக்குகள் பதிவு செய்துள்ளது சிபிஐ.

இந்த முறைகேடுகள் குறித்த வழக்கு விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்றது வருகிறது. இன்றைய விசாரணையின் போது மத்திய அரசு சார்பில் ஆஜரான வாஹன்வதி, மின் உற்பத்தியை பெருக்குவதற்காக ஒதுக்கீட்டு விதிகளை மாற்றியிருக்கலாம்.
நிலக்கரி சுரங்கங்கள் ஒதுக்கீட்டில் இன்னும் நேர்த்தியாக நடந்திருக்க முடியும். ஆனால், நல்லெண்ணத்தின் அடிப்படையிலேயே முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன என்றார்.












Click it and Unblock the Notifications